Share with Friends
செர்ரி
செர்ரி

செர்ரி பழங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும்.எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால்,இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

கொய்யா
கொய்யா

கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது.மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.

பீச்
பீச்

மிகவும் சுவையான பீச் பழத்திலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது.எனவே இந்த பழத்தையும் தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

ஆப்பிள்
ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் தான்.ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால்,அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம்,நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அன்னாசி
அன்னாசி

அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான்.இந்த பழத்தில் ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.

பேரிக்காய்
பேரிக்காய்

பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

அத்திப்பழம்
அத்திப்பழம்

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு,இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும்.அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

நெல்லிக்காய்
நெல்லிக்காய்

கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும்.இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால்,இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.

1/8