Share with Friends
பட்டர் ஆலு பரோட்டா
பட்டர் ஆலு பரோட்டா

வட இந்தியாவில் காலை உணவாக சாப்பிடப்படும் இந்த உணவில் வெண்ணெய் அதிகமாக கலந்திருக்கும். எனவே இத்தகைய கொழுப்புகள் நிறைந்த உணவை காலையில் சாப்பிட்டால், அது நமது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு வேகமாக அதிகரிக்கச் செய்கிறது.

பூரி
பூரி

எண்ணெயில் பொரித்து தயாரிக்கப்படும் பூரியை நாம் காலையில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த பூரி நமது உடலின் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல.

பாவ் மற்றும் உசல் சேவ்
பாவ் மற்றும் உசல் சேவ்

மகாராஷ்ட்ரியாவில் இந்த உணவை காலை உணவாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த உணவை நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல.

சாண்ட்விச்
சாண்ட்விச்

சாண்ட்விச் உணவு ஒரு ஆரோக்கியமான காலை உணவாக சிலர் கருதுகின்றனர். ஆனால் உண்மையில், சுத்திகரிக்கப்பட்ட மாவினால், பிரட் கொண்டு தயாரிக்கப்படுகிறது. எனவே இந்த உணவை நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது.

1/4