Share with Friends
பாதாம் பருப்பு
பாதாம் பருப்பு

வாதுமை மரத்தின் கொட்டையான ஒரு கைப்பிடி பாதாம் பருப்பில் ஏராளமான கால்சியம், மக்னீசியம், விட்டமின்கள், புரதம், நார்சத்து, பைபர், ஜிங்க், இரும்பு போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இதனை சாப்பிடுவதால் மூளை சிறப்பாக இயங்கும். இதயநோய்கள் வராமல் பாதுகாக்கும். சர்க்கரையினை கட்டுக்குள் வைத்திருக்கும்

முந்திரி
முந்திரி

முந்திரியில் உள்ள பல சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், இதயத்தினை பாதுகாக்கவும் பயன்படுகிறது. கொழுப்பினை குறைக்கும். இரும்பு சத்தினை அளிக்கும். சர்க்கரை நோயினை தடுக்கும். கண் பார்வை, முடி வளர்ச்சி, சரும பாதுகாப்பிற்கு மிக நல்லது.

சியா விதைகள்
சியா விதைகள்

இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி தீரும். உடல் எடையானது குறையும். செரிமான திறன் அதிகரிக்கும். புத்துணர்ச்சியினை அதிகரித்து மூளையின் செயல்பாட்டிற்கு உதவும்.. ஆர்த்ரைட்டீஸ், சர்க்கரை நோயானது வருவதை தடுக்கும்.

பூசணி விதைகள்
பூசணி விதைகள்

பூசணி விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்பினை குறைத்து இதய நோய் வருவதை தடுக்கும். மன அழுத்தத்தினை போக்கும். புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பினைக் குறைக்கும்.

வால்நட்
வால்நட்

தினமும் 7 வால்நட் களை சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோயினை தடுக்கலாம். கொழுப்பினை குறைக்கும். இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்திருக்கும். உடல் எடை குறையும். ரத்தத்தில் சர்க்கரையினை கட்டுப்படுத்தும். சரும பளபளப்புக்கும் முடி ஆரோக்கியத்திற்கும் உதவும்.

1/5