Share with Friends
ஆன்டிபாக்டீரியல் சோப்
ஆன்டிபாக்டீரியல் சோப்

கைகளை சுத்தமாக கழுவ உதவும் பல சானிடைசர்களும், ஆன்டி பாக்டீரியல் சோப்களும் சந்தையில் அதிகளவில் தற்போது கிடைக்கின்றன. இவை பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படக்கூடியவை. ஆனால், காய்ச்சல், சளி போன்ற நோய்தொற்று கிருமிகளை அழிக்காது. இவற்றில் ட்ரைக்ளொசான் என்னும் புற்றுநோய் உண்டாக்கும் பொருளானது பயன்படுத்தப்படுவதால் இதனை தவிர்ப்பது நலம்.

காது குடையும் பட்ஸ்
காது குடையும் பட்ஸ்

நமது காதில் சுரக்கும் மெழுகு தன்மையுள்ள பசையானது. தூசிகள் காதில் சென்றுவிடாமல் தடுக்கிறது. காதில் செல்லும் தூசுக்கள் இந்த மெழுகில் ஒட்டி கொள்ளும். தூசுள்ள் மெழுகானது வெளிநோக்கி நகரும். இதனை குளிக்கும் போது தேய்த்து சுத்தம் செய்தாலே போதுமானது. பட்ஸ், ஊசி, காட்டன் துணி போன்றவற்றினை பயன்படுத்துவதனை தவிர்க்கவேண்டும்.

நக வெட்டி
நக வெட்டி

நகவெட்டியினை நாம் பயன்படுத்திய பின் சுத்தமாக கழுவி வைக்கவேண்டும். அல்லது வீட்டில் அனைவரும் தனிதனி நகவெட்டியினை உபயோகிக்கவேண்டும். ஒரே நகவெட்டியினை வீட்டில் உள்ள அனைவரும் பயன்படுத்தும்போது நோய்தொற்றானது ஏற்படும்.

பிளெண்டர்
பிளெண்டர்

பழச்சாறுகளை தயாரிக்க நாம் மிக்ஸியினை பயன்படுத்துவோம். அதனை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் சால்மோனெல்லா மற்றும் ஈ-கோலை போன்ற பாக்டீரியாக்கள் பரவும் அபாயம் அதிகம். மிக்ஸியில் பழங்களை அரைப்பதால் அதிலுள்ள நார்ச்சத்து நீங்கிவிடும். எனவே பழங்களை அப்படியே சாப்பிடவேண்டும்.

குழந்தைகள் விளையாடும் பொம்மைகள்
குழந்தைகள் விளையாடும் பொம்மைகள்

நைலான், பாலியஸ்டர் நூலால் செய்யப்பட்ட டெடிபியர் உள்ளிட்ட பொம்மைகளில் உள்ள கிருமிகள் எளிதில் குழந்தைகளுக்கு தொற்றி கொள்ளும். குழந்தைகளின் மூக்கின் அருகில் கொண்டு செல்லும் போது சளித்தொற்று, இருமல் போன்றவை ஏற்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் பொம்மையினை மாற்றவேண்டியது அவசியம்.

1/5