Share with Friends

Live Feed

Last update 0.25mins ago

சட்டமுன்வடிவு மசோதாவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.

நீதிமன்றத்தில் தடை வாங்க முடியாத அளவுக்கு சட்டமாக இயற்றப்பட வேண்டும் - ஸ்டாலின்

மதுரை செல்லூரில் போராட்டக்காரர்கள் வசமிருந்த ரயில் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

சட்டமுன் வடிவை பார்வையிடுவதற்காக நீதிபதி ஹரிபரந்தாமன், இயக்குனர் கௌதமன், கார்த்திகேய சிவசேனாதிபதி, ஹிப் ஹாப் ஆதி, ராஜேஷ், ராஜசேகரன், அம்பலத்தரசு மற்றும் போராட்டக்குழு உறுப்பினர்கள் வருகை புரிந்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்வதற்கான சிறப்பு சட்டசபை கூட்டம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.

அறவழிப் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று மாலை 5 மணிக்கு கூடும் சட்டசபையில், அவசரசட்டம் தொடர்பில் ஜல்லிக்கட்டு சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

எங்களுடைய இளைஞர்களின் போராட்டம் அறப்போராட்டம் மட்டுமே, இதெல்லாம் பொலிஸ் அதிகாரிகளின் சூழ்ச்சியே என கேள்விப்படுகிறோம்- இயக்குனர் கௌதமன்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

நமது நோக்கம் திசை திரும்பும் சூழ்நிலையை கண்டு மனவேதனை அடைகிறேன்- பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னையில் கோயம்பேடு முதல் விமான நிலையம் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

மயிலாப்பூர் டிவி கோவில் தெருவில் பொலிஸ் வாகனங்கள் தீப்பற்றி எரிகின்றன.

இளைஞர்கள் தன்னெழுச்சியுடன் போராடியதே ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை, சில விஷமிகளே இதற்கு காரணம்- நடிகர் ராகவா லாரன்ஸ்

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மேனகா காந்தி வழக்கு தொடரவில்லை- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

பொலிஸ் அதிகாரிகள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

ஜல்லிக்கட்டு ஆதரவான போராட்டத்துக்கு நிரந்தர வெற்றி கிடைத்துவிட்டது- ராகவா லாரன்ஸ். மேலும் தகவல்களுக்கு

திருவல்லிக்கேணி ஜாம் பஜார் காவல் நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு தீ வைப்பு

தமிழக அரசு, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், அமைப்புகள் உட்பட உச்சநீதிமன்றத்தில் 70 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ம் திகதி ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் முடிவு

சென்னையில் திருவல்லிக்கேணியில் போராட்டம் நடத்த முயன்றவர்கள் மீது பொலிசார் தடியடி

சென்னையில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சி- பல மாணவர்கள் காயம்

சட்டசபை தொடங்கியவுடன் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

தமிழகத்தில் சட்டசபை தொடங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் சட்ட முன்வடிவாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டுக்கோட்டையில் போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக இளைஞர்கள், பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்கு உரியது- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு

சேலத்தில் போராட்டக்காரர்கள் வசம் இருந்த ரயில் மீட்கப்பட்டதுடன், காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து செல்லுமாறு பொலிசார் அறிவுறுத்தல்

கோவை வஉசி மைதானத்தில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற்றம்

திண்டுக்கல் பழனியில் போராட்டக்காரர்கள் தானாகவே முன்வந்து வாபஸ் பெற்று கலைந்து சென்றுள்ளனர்.

மதுரை செல்லூரில் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளவர்களை அமைதியாக கலைந்து செல்லும்படி பொலிசார் அறிவுறுத்தல்

தமிழகத்தில் போராட்டக்காரர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்- இளைஞர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தி கொள்ளலாம். யாராலும் ஜல்லிக்கட்டை தடுக்க முடியாது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கலில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் தேவை என்றும் வலியுறுத்தினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது பொலிசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, அ.தி.மு.க. நிர்வாகிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் மக்கள் அதை ஏற்கவில்லை. தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் நிர்பந்திக்க... ஆவேசமடைந்த மக்கள் தண்ணீர் பாக்கெட்டுகளை கொண்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அ.தி.மு.க.வினர் அறிவித்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் பிறக்கப்பட்டதற்கு, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், கட்ஜுவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பலர் ஜல்லிக்கட்டு தொடர்பாக சந்தேகம் கேட்டு வருகின்றனர்.

இதற்கு அவர், 'அவசர சட்டம், தமிழக சட்டசபையில் நிறைவேறினால், அது நிச்சயமாக நிரந்தர சட்டமாக மாறிவிடும் எனவே யாரும் கவலைப்பட வேண்டாம் எனக்கூறியுள்ளார்.

'அங்காநல்லூரில் 350 காளைகள் பங்கேற்கும். மேலும், பார்வையாளர்களுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட எஸ்.பி தலைமையில் பாதுகாப்பு பணியில் 2,500 காவலர்கள் ஈடுபட உள்ளனர்.

அதேபோல், 15 சார் ஆட்சியர்கள் மற்றும் 10 வட்டாச்சியர்களும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

அவசர சட்டம் கொண்டு வந்ததே நிரந்தர தீர்வு தான்- முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை செயலகத்தில் பேட்டி

ஜல்லிக்கட்டு போராட்டத்தை கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் பண்பாட்டை காக்க அறவழியில் காப்பாற்றிய இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி- முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடை நீங்கியதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

அவசர சட்டம் வேண்டாம், நிரந்தர தீர்வே எங்களுக்கு வேண்டும் - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கருத்து

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பித்தார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகை

பிரான்சின் ஈபிள் கோபுரம் முன்பாக தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இன்று மாலை சென்னையிலிருந்து மதுரை புறப்பட்டு செல்கிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஜல்லிக்கட்டு நடத்த தடை நீக்காவிட்டால் திங்கள்கிழமை முதல் பால் விற்பனை நிறுத்தப்படும் என புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மக்களுக்காவே சட்டம், சட்டத்திற்காக மக்கள் அல்ல - மெரினாவில் நடிகர் ராகவா லாரன்ஸ்

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இன்று மாலைக்குள் பிறப்பிக்கப்படும் என்று தான் நம்புவதாக மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாமல் மக்கள் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசவுள்ளார்.

ஜல்லிக்கட்டு சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது. அவசர சட்டம் கொண்டு வந்தாலும் உச்சநீதிமன்றம் தடை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு- தொல்.திருமாவளவன்

ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவது குறித்து ஆலோசனை செய்ய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வரவிருக்கிறார்.

அவர் ஞாயிறன்று வருவதாக திட்டமிட்டிருந்த நிலையில், முன்கூட்டியே வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடைபெறவுள்ளது. எதிர்வருகிற 22.01.17 திகதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 2 மணி அளவில் Place de trocadéro et du 11 novembre, 75016, Paris, (metro 6) என்ற இடத்தில் போராட்டம் நடைபெற உள்ளது.

மிருகவதை தடுப்புச் சட்டத்தில் காளைகளை காட்சிப்படுத்துதல் தடை தொடர்பான ஷரத்தில் தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், துபாய், இலங்கை, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறுகிறது.

போயஸ் தோட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுடன் முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தமிழகத்தின் நத்தம் அருகே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது, ஏராளமான இளைஞர்கள் சேர்ந்து காளைகளை அடக்கினர்

புதுச்சேரியில் காளைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தால் ஜனவரி 21, 22ம் திகதிகளில் நடைபெற இருந்த சென்னை பல்கலைகழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்த 1 லட்சம் ஜல்லிக்கட்டு காளைகள், 40 ஆயிரமாக குறைந்துவிட்டன என்கிறார்கள். இப்படியே இன்னும் இரண்டு வருடங்கள் இதேநிலை நீடித்தால் காளைகளை உயிரியல் பூங்காக்களில் தான் பார்க்க முடியும் என ஹிப் ஹாப் தமிழா ஆதி வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு உள்துறை அமைச்சகத்துக்கு ஒப்புதல் வழங்கியது.

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது, தயவுசெய்து போராட்டத்தை கைவிடுங்கள்- மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

"கானகன்” நாவலுக்காக வழங்கப்பட்ட 2016-ஆம் ஆண்டின் யுவபுரஸ்கார் விருதை, சாகித்ய அகாதமி அலுவலகத்தில் திரும்ப அளித்தார் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அதிமுக எம்.பிக்கள் சந்திப்பு

ஜல்லிக்கட்டு தீர்ப்பை ஒருவாரம் ஒத்தி வைக்க வேண்டும்- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல்

வாடிவாசல் திறந்து காளைகள் சீறிப்பாயும் வரை வீடுவாசல் திரும்ப மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு ஓரிரு நாட்களில் நடைபெறும் என உறுதியளித்துள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், Free Sex தலைப்பை முன்வைத்து இப்போராட்டத்தை கேவலமாக விமர்சித்திருக்கிறார் விலங்குகள் நல ஆர்வலர் ராதாராஜன்.

ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து தான் வகித்து வந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நிர்வாககுழு உறுப்பினர் பதவியை சமுக ஆர்வலரான கார்த்திகேய சிவசேனாபதி ராஜினாமா செய்துள்ளார்.

தமிழக அரசு தரப்பிலிருந்து ஏதாவது அவசர நடவடிக்கை எடுப்பதுதான் ஒரே தீர்வு என்று சட்ட நிபுணர்கள் முதல்வரிடம் கூறியுள்ளார்கள்.

அப்போதுதான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். ஆதரவு போராட்டங்கள் ஓயும். இதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் டெல்லியில் இருந்தபடியே, சென்னை தலைமைச் செயலக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சில உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

இதற்கான சில நடவடிக்கைகளை டெல்லியில் இருந்தபடியே செய்துமுடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர தமிழகத்திற்கு அதிகாரம் உள்ளது என மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.

நிலையில், ஜல்லிக்கட்டு பற்றி சட்ட வல்லுநர்களுடன் டெல்லியில் பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். அரசு மூத்த அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இனிமேல் எங்களுக்கு இந்தியன் என்ற அடையாளம் தேவையில்லை, நாங்கள் இனி தமிழர் மட்டுமே என்று கோஷமிட்டனர். கோஷமிட்டது மட்டுமின்றி இந்திய அரசு வழங்கிய ஆதார் அட்டைகள், வாக்காளர் அட்டைகள் ஆகியவற்றை தூக்கி எறிந்தனர்

தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி அவசர சட்டம் இயற்றினால் ஜல்லிக்கட்டு தடை நீங்கும் என திமுக எம்.பி-யான திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் முதலமைச்சர் பொறுப்போடு பதில் சொல்கிறார், மாணவர்கள் போராட்டத்திற்கு யாரும் ஆதரவு தெரிவிக்க வேண்டியதில்லை, இது அவர்களாக நடத்துகிற போராட்டம்.

அந்த போராட்டக் களத்தில் ஈடுபட்டிருக்கிற மாணவ சமுதாயத்திற்கு தமிழினம் நன்றி கடன்பட்டிருக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகவும், மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப், ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் பிரமாண்டமாக இருக்கிறது. இப்படி ஒரு பிரமாண்டத்தைப் பார்த்ததில்லை, முழுவதும் மக்களின் முயற்சி.

படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது, எதனால் இப்போராட்டம் நடைபெறுகிறது என விரிவாக தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மின்சார ஊழியர்கள் நாளை ஒருநாள் வேலை நிறுத்தம்

தமிழகத்தில் நாளை பேருந்துகள் இயங்காது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டத்தை இயற்றக் கோரி அதிமுக எம்பிக்கள் நாளை மறுநாள் ஜனாதிபதியை நேரில் சந்திக்கின்றனர்.

சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பிரதமர் அலுவலக எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து பத்தாயிரம் பேர் போராட்டம்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து நடிகர், நடிகைகளும் பங்கேற்பார்கள்.

டெல்லியில் இருந்து சென்னை திரும்ப இருந்த முதல்வரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் ஏதும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் வரும் பிப்ரவரி 3ம் திகதி 15 நாட்களுக்கு பொது இடங்களில் ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த பொலிஸ் தடை விதித்துள்ளது.

மதுரை செல்லூரில் ரயிலை மறித்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்

தஞ்சாவூரில் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம், யாரும் அதை தடுக்க முடியாது- கேளர முதல்வர் தகவல்

புதுச்சேரியில் AFT திடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பெண்கள் அனைவரும் களத்தில் இறங்குவோம் என எச்சரிக்கை

தஞ்சாவூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதால் பரபரப்பு

சேலம் ரயில் நிலையத்தில் காரைக்கால்- பெங்களூர் ரயிலை மறித்து போராட்டம் நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஆட்டோ, கால் டாக்ஸி மற்றும் வேன் நாளை இயங்காது என தமிழக சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நல்லதே நடக்கும். மிக விரைவில் ஜல்லிக்கட்டு மீதான நடவடிக்கையை பார்ப்பீர்கள் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு

தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும், ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது - பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சவுதி, சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளில் இருந்தும் தமிழர்கள் சென்னை நோக்கி விரைந்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக கல்லூரிக் கல்வி இயக்குநர் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமெரிக்காவின் சிகாகோ நகரிலும் போராட்டம் நடத்தப்பட்டது.

டெல்லியில் முதல்வர் பன்னீர்செல்வம் தங்கியுள்ள தமிழ்நாடு இல்லத்தின் முன்பாக தமிழ் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் கார்கில் போர் வீரர் செல்வராமலிங்கம், இந்திய அரசால் வழங்கப்பட்ட “ Operation Vijay" என்ற பதக்கத்தை திரும்ப வழங்கினார். மேலும் விபரங்களுக்கு

சென்னையில் 31 அரசு, தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, அலங்காநல்லூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் தீயாக பரவி வருகின்றது.

போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க உள்ளார்.

இந்நிலையில், மத்திய சுற்றுச் சூழல் மந்திரி அனில் மாதவ் தாவே தலைமையில் ஜல்லிக்கட்டு குறித்து முக்கிய முடிவெடுப்படுப்பது தொடர்பாக நாளை டெல்லியில் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தில் நாளை மதியம் 1 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மத்திய சுற்றுச் சூழல் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரமடைந்த நிலையில் பிரதமர் மோடியை நாளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளார், இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் முழுவிபரம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இலங்கை, அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகளிலும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விபரங்களுக்கு


ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் எந்தவொரு நடிகனும் முன்நிற்கக்கூடாது, ஏனெனில் இதுநாள் வரை நடிகன் பின்னால் இளைஞர்கள் வந்தார்கள்.

இந்த முறை அவர்கள் பின்னால் நாம் போவோம், என் மகன், தம்பி எனக்காக போராடுகிறான் என உருக்கமாக பேசினார் நடிகர் கமல்ஹாசன்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பத்து பேர் கொண்ட குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும்வரை ஓயமாட்டோம் என மக்கள் தெரிவித்தனர்.

தமிழகம் எங்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என ஒன்று திரண்டனர், தெருவிளக்குகளை அணைத்தும், மொபைல் சிக்னல்களை தடைசெய்தும் கூட்டம் கலைந்து செல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் பொலிசார் திணறிப் போயினர்.

அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம், சென்னை மெரினா, கோவை வஉசி மைதானம், மதுரை தமுக்கம் மைதானம் என தமிழகம் எங்கும் போராட்டம் வெடித்தது.

தமிழகமே போராடிக் கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலதிக விபரங்களுக்கு

தடை என்பது எமது பண்பாட்டு மீது தொடுக்கப்பட்ட போர், 21ம் திகதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும், எந்த இடத்தில் எப்படி நடக்கும் என்பது சஸ்பென்ஸ், காளைகள் சீறுவது மட்டும் உறுதி என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் 12 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கவிதை வைரலானது

ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூரில் பிரம்மாண்ட பேரணி நடந்தது, இளைஞர்கள், ஊர்மக்கள் என தமிழகமே திரண்டு வந்தது, இந்த பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

தடையை மீறி சிவகங்கையில் ஜல்லிக்கட்டை நடத்த முயன்ற நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸை பொலிசார் எச்சரித்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் போராட்டம் நடைபெற்றது, தமிழகத்தின் பல இடங்களிலும் மக்கள் காளைகளை அவிழ்த்துவிட்டு தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தினர்.

நடிகை த்ரிஷாவுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்ததால், டுவிட்டரில் இருந்து விலகினார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவனியாபுரத்தில் நடந்த போராட்டத்தின் போது இயக்குனர் கௌதமன் உட்பட மக்கள் மீது பொலிசார் தடியடி நடத்தினர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியாது என மத்திய அரசு கைவிரித்தது. முழுமையான தகவல்களுக்கு