Share with Friends

Live Feed

Last update 0.25mins ago

Sanjay test 2==============

Sanjay testing ----------

Ganesh News Testing1

ஆளுநருடன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சந்திப்பு

தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

ராமநாதபுரம், கடலூரில் அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு,பல பகுதிகளில் சாலைமறியலில் ஈடுபட்ட திமுகவினரை பொலிசார் கைது செய்தனர்

மெரினாவில் காந்தி சிலை அருகே எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் திமுக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திமுகவினரை வெளியேற்றியது ஜனநாயக மரபுக்கு எதிரானது- ஓபிஎஸ்

நடுநிலை வாக்குகள் எதுவும் இல்லை

பெரும்பான்மையை நிரூபித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி வெற்றி

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக எம்எல்ஏ-க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வாக்கெடுப்பில் முதல்வர் பழனிச்சாமி வெற்றி

எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்எல்ஏ-க்கள் ஆதரவு, 11 பேர் எதிர்ப்பு, நடுநிலை வாக்குகள் எதுவும் இல்லை.

குரல் வாக்கெடுப்பு மரபு பிரச்சினையால் எண்ணிக்கை வாக்கெடுப்பு- சபாநாயகர் தனபால்

சட்டசபையில் நடந்தவற்றை கூறுவதற்காக ஆளுநர் மாளிகைக்கு ஸ்டாலின் சென்றுள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் இல்லாமல் வாக்கெடுப்பு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது

சபாநாயகர் தன்னுடைய சட்டையை அவரே கிழித்துக் கொண்டார்- ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆளுநருடன் அவசர சந்திப்பு

சட்டப்பேரவையில் ஒரே தீர்மானத்தை இரண்டு முறை முன்மொழிய முடியாது - முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா

சட்டசபையிலிருந்து 20 திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம். ஸ்டாலின், துரைமுருகன் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

சேதமடைந்த சபாநாயகரின் இருக்கை பேரவை ஊழியர்களால் சரிசெய்யப்பட்டது.

கூவத்தூர் விடுதி மூடப்பட்டதாக நிர்வாகம் அறிவிப்பு

அமைச்சர்களின் மேசையில் ஏறி நின்று எழும்பூர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திமுகவினர் அமளி

இரசகிய வாக்கெடுப்பு நடத்துமாறும், ஒரு வாரம் சட்டப் பேரவையை ஒத்தி வைக்குமாறும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை

திமுகவினரை வெளியேற்ற முடியாமல் காவல்துறையினர் திணறல்

அதிமுக அமைச்சர்களின் மேசையில் ஏறிய திமுக அணியினர், சபாநாயகரின் மைக் மறுபடியும் உடைப்பு

சட்டசபை 3 மணிவரை ஒத்தி வைப்பு

சட்டசபையில் சபாநாயகரின் இடத்தில் திமுகவினர் செய்த ரகளையின் உச்சம்...

திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற முடியாமல் சட்டப்பேரவை காவலர்கள் திணறல்

மீண்டும் மூன்று மணிவரை சட்டசபை ஒத்தி வைப்பு

ஊ.......... அடித்தார் பூங்கோதை, காகிதங்களை கிழித்து வீசி பெரும் அட்டகாசம்

சபாநாயகரை மீண்டும் முற்றுகையிட்டனர் திமுகவினர்.

பேரவையில் இருந்து வெளியேற மறத்த திமுகவினருடன் காவல் துறையினர் தள்ளு முள்ளு..

சட்டப் பேரவை மாண்புகளை குலைத்ததால் தி.மு.க எம்.எல்.ஏக்களை வெளியேற்றினார் சபாநாயகர் தனபால்

பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார் பழனிச்சாமி

ரகளையில் ஈடுபட்டதால் பேரவையில் இருந்து திமுக எம்எல் ஏக்கல் வெளியேற்றம்.

இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஸ்டாலின் மீண்டும் அவையில் கோரிக்கை

சட்டசபை வளாகத்தில் அதிரடிப்படையினர் குவிப்பு, 2000க்கும் மேற்பட்ட பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எனக்கு நடந்த சோகத்தை எங்கு போய் சொல்வது - சபாநாயகர் வேதனை

அமளிக்குப்பிறகு மீண்டும் சட்டப்பேரவை ஆரம்பம்

தலைமை செயலகத்திற்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

சட்டசபைக்குள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது, சட்டசபை உதவியாளர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு எனத் தகவல்

அதிமுகவும் திமுகவும் ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளன - பாமக தலைவர் ராமதாஸ் குற்றச்சாட்டு

அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் சில எம்எல்ஏ-க்கள் வெளியே வந்துள்ளனர்.

சட்டசபையில் திமுக எம்எல்ஏ பூங்கோதை மேஜை மீது ஏறி ரகளையில் ஈடுபட்டார்.

பலத்த அமளிக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் மட்டும் அமைதி காத்தனர்.

சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து கொண்டு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் ரகளை

சட்டசபையில் இருந்து சபாநாயகர் தனபால் வெளியேறினார்.

சபாநாயகர் மைக் உடைக்கப்பட்டு அவரது இருக்கையும் சேதப்படுத்தப்பட்டது, பேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் உடைப்பு

சட்டசபை கூட்டம் மதியம் ஒரு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரை முற்றுகையிட்டு திமுக எம்எல்ஏ-க்கள் முழக்கமிட்டதால் கடும் அமளி ஏற்பட்டது.

வாக்கெடுப்பு முறை எனது தனிப்பட்ட முடிவு, என் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது என்று என சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடும் அமளிக்கு மத்தியில் சட்டசபை கூட்டம் தொடங்கியது.

ஒவ்வொரு அமைச்சரின் காரிலும் ஐந்து எம்எல்ஏ-க்கள் கூவத்தூரிலிருந்து அழைத்து வரப்பட்டனர்.

சட்டசபைக்கு வருகை தந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தலைமை செயலகத்துக்கு வருகை தந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காரை பொலிசார் சோதனையிட்டதால் திமுக எம்எல்ஏ-க்கள் கோஷமிட்டனர்.

தலைமை செயலகத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன் எம்எல்ஏ-க்கள் செல்வதற்கென்று தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.