Share with Friends

Live Feed

Last update 0.25mins ago

பா.ஜ.க சிறப்பான ஆட்சி தரும்: அகிலேஷ் நம்பிக்கை

ஆட்சி அமைக்க உள்ள பா.ஜ.க அரசு, சிறப்பான ஆட்சியை தரும் என உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ் கூறியுள்ளார்.

உத்திரபிரதேசம் - 403 தொகுதிகள்

பாஜக - 324

காங்கிரஸ் - 54

பகுஜன் சமாஜ்வாடி - 19

மற்றவை - 6

பஞ்சாப் - 117 தொகுதிகள்

காங்கிரஸ் - 77

ஆம் ஆத்தி - 20

பாஜக -18

மற்றவை - 2

கோவா 40 - தொகுதிகள்

காங்கிரஸ் - 17

பாஜக - 13

மற்றவை - 10

உத்தரகாண்ட் - 70 தொகுதிகள்

காங்கிரஸ் - 11

பாஜக - 56

மற்றவை - 2

மணிப்பூர் - 60 தொகுதிகள்

காங்கிரஸ் - 28

பாஜக - 21

மற்றவை - 11




உத்திரப்பிரதேசத்தில் சாதித்து காட்டியது பா.ஜ.க

உத்திரப்பிரதேசத்தில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இங்கு 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணும் பணி நடைபெற்றது.

பா.ஜ.க.324 தொகுதிகளிலும், சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி 54 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 20 தொகுதிகளிலும், மற்றவர்கள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.

மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல்

உத்தரகண்ட், உத்திரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டது. இதில் உத்தரகண்ட் மற்றும் உ.பி..யில் பா.ஜ ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார், ராகுலின் வாழ்த்துக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் நன்றி ... வாழ்க ஜனநாயகம் என குறிப்பிட்டுள்ளார்.

5 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை மாலை 6.30 மணி நிலவரம்

உத்திரபிரதேசம் - 402 தொகுதிகள்

பாஜக - 325

காங்கிரஸ் - 54

பகுஜன் சமாஜ்வாடி கட்டி - 19

மற்றவை - 5

பஞ்சாப் - 117 தொகுதிகள்

காங்கிரஸ் - 77

ஆம் ஆத்தி - 20

மற்றவை - 2

கோவா 40 - தொகுதிகள்

காங்கிரஸ் - 17

பாஜக - 13

மற்றவை - 10

உத்தரகாண்ட் - 70 தொகுதிகள்

காங்கிரஸ் - 11

பாஜக - 57

மற்றவை - 2

மணிப்பூர் - 60 தொகுதிகள்

காங்கிரஸ் - 26

பாஜக - 22

மற்றவை - 10

5 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை மாலை 5.30 மணி நிலவரம்

உத்திரபிரதேசம் - 402 தொகுதிகள்

பாஜக - 324

காங்கிரஸ் - 54

பகுஜன் சமாஜ்வாடி கட்டி - 20

மற்றவை - 5

பஞ்சாப் - 117 தொகுதிகள்

காங்கிரஸ் - 77

ஆம் ஆத்தி - 20

மற்றவை - 2

கோவா 40 - தொகுதிகள்

காங்கிரஸ் - 17

பாஜக - 13

மற்றவை - 10

உத்தரகாண்ட் - 70 தொகுதிகள்

காங்கிரஸ் - 11

பாஜக - 57

மற்றவை - 2

மணிப்பூர் - 60 தொகுதிகள்

காங்கிரஸ் - 25

பாஜக - 22

மற்றவை - 10

கடந்த 10 வருடங்களாக சேவை செய்ய வாய்ப்பு அளித்ததற்காகவும், இந்த தேர்தலில் எங்களுக்கு ஓட்டு போட்டதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் பா.ஜ.,வுக்கு இதுவரை இல்லாத வெற்றி கிடைத்துள்ளது. இளைஞர்கள் அதிகளவில் ஆதரவு கொடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

பா.ஜ., தொண்டர்களின் கடின உழைப்பிற்கு வணங்குகிறேன். அடிமட்டத்திலிருந்து தொண்டர்கள் ஓய்வின்றி உழைத்தனர். அவர்கள், மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர்.கடினமாக உழைத்து கட்சியை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற பா.ஜ., தலைவர் அமித்ஷா மற்றும் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்

நாட்டு மக்களின் நலத்திட்டத்திற்காகவும் நலத்திற்காகவும் கடினமாக உழைத்து வருகிறோம். 125 கோடி இந்திய மக்களின் சக்தி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என டுவிட்டரில் கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அமிர்தசரஸ் (கிழக்கு) தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ராஜேஷ் குமார் ஹனி என்பவரை விட 42,809 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக. 300க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை!

இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் முறைகேடு செய்து பாஜக வென்றுள்ளதாக மாயாவதி குற்றச்சாட்டு. தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக மாயாவதி தகவல்...

பஞ்சாப் சட்டசபை தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள வெற்றிக்காக முதல் மந்திரி வேட்பாளர் அம்ரீந்தர் சிங்கை இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் முபாரக்பூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை விட 2,000 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி முகத்தில் உள்ளார்.

பஞ்சாப் மாநில மக்கள் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்ததன் மூலம் தனக்கு மிகப்பெரிய பிறந்தநாள் பரிசை அளித்துள்ளதாக முதல்வர் வேட்பாளர் கேப்டன் அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநில தேர்தலில் படுதோல்வியை தழுவியுள்ள பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, வாக்கு இயந்திரங்களில் எந்த சின்னத்துக்கான பொத்தானை அழுத்தினாலும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கே ஓட்டுகள் பதிவானதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி 5 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை விவரங்கள்

உத்திரபிரதேசம் - 402 தொகுதிகள்

பாஜக - 304

காங்கிரஸ் - 64

பகுஜன் சமாஜ்வாடி கட்டி - 15

மற்றவை - 14

பஞ்சாப் - 117 தொகுதிகள்

காங்கிரஸ் - 77

ஆம் ஆத்தி - 21

மற்றவை - 2

கோவா 40 - தொகுதிகள்

காங்கிரஸ் - 13

பாஜக - 11

மற்றவை - 10

உத்தரகாண்ட் - 70 தொகுதிகள்

காங்கிரஸ் - 11

பாஜக - 57

மற்றவை - 2

மணிப்பூர் - 60 தொகுதிகள்

காங்கிரஸ் - 18

பாஜக - 16

மற்றவை - 8

உத்திரபிரதேசத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று அசுர பலத்துடன் ஆட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.க.

கடந்த 15 ஆண்டுகளாக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் காட்சிகள் ஆதிக்கம் செலுத்தின.

15 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி.

கோவா: 11/40 தொகுதிகள் பெற்று காங்கிரஸ் முன்னிலை

பாஜக 8

காங்கிரஸ் 11

ஆம் ஆத்மி 0

மற்றவை 2

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளா உண்ணாவிரதத்தை கைவிட்டு, அரசியல் கட்சி தொடங்கி, மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.

5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், 85 வாக்குகள் மட்டுமே பெற்று, காங்கிரஸ் முதலமைச்சர் ஓக்ரோம் இபோபி சிங்கிடம் தோல்வியைச் சந்தித்திருக்கிறார். 6-இல் ஒரு பகுதி வாக்குகளைப் பெறாமல், டெபாசிட்டைத் திரும்ப வாங்கமுடியாத தோல்வியைச் சந்தித்திருக்கிறார்.

121 வாக்குகள் நோட்டாவில் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர்: மொத்தம் 60 தொகுதிகள்

காங்கிரஸ் / 20

பாஜக - 15

இடதுசாரிகள் - 0

உத்தரபிரதேச வெற்றிக்கு மகிழ்ச்சி வெளியிட்ட பிரதமர் மோடி அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து, அவருக்கு இனிப்பு ஊட்டினார்.

பிற்பகல் 2 மணியளவில் உ.பி முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் அம்மாநில ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளார்.

உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெறும் நிலையில் மோடி அலையே வெற்றிக்குக் காரணம் என்று உ.பி.பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப்பில் பா.ஜ.க கூட்டணியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.

பஞ்சாபில் ஆளும் பா.ஜ.க கூட்டணிக்கு பெரும் பின்னடைவு.

3வது இடத்திற்கு தள்ளப்பட்டது ஆளும் பா.ஜ.க - அகாலி தளம் கூட்ட்டணி.

பஞ்சாபில் புதிதாக களம் இறங்கிய ஆம் ஆத்மி 2வைத்து இடம் பிடித்து எதிர்கட்சி அந்தஸ்தை பெறுகிறது.

பஞ்சாபின் புதிய முதலமைச்சராகிறார் அம்ரீந்தர் சிங்.

உத்திரபிரதேச தோல்வி எதிரொலியால் வாரணாசியில் அர்தாலி பஜாரில் உள்ள சமாஜ்வாதி கட்சி அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.

மோடியின் சொந்தத் தொகுதியான இங்கு அவரது 3 நாள் கடுமையான பிரச்சாரத்தை எதிர்த்து அகிலேஷ்-ராகுல் கூட்டணியும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாறாக வாரணாசி பாஜக அலுவலகத்தில் ‘ஹர் ஹர் மோடி, ஜெய் ஸ்ரீராம் என்று பாஜக தொண்டர்கள் வெற்றி முழக்கமிட்டு வருகின்றனர்.


உத்தரப்பிரதேசத்தில் பாஜகவும் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைக்கப் போவது உறுதியாகி உள்ளது.

5 மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. உத்தரபிரதேசத்தில் 78 மையங்களிலும், உத்தரகாண்டில் 15 மையங்களிலும், பஞ்சாப்பில் 54 மையங்களிலும், கோவாவில் 2 மையங்களிலும், மணிப்பூரில் 9 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களிலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி தொடங்கி, கடந்த 8-ந் தேதி வரை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.