Share with Friends

Live Feed

Last update 0.25mins ago

பட்ஜெட் உரை முடிந்தது. 2 மணி நேரம் 50 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார் நிதி அமைச்சர் ஜெயக்குமார்.

ஜி.எஸ்.டி முறை அமலுக்கு வர உள்ளதால் வரிச் சலுகைகள் எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

ஓய்வூதியம் திட்டத்துக்கு ரூ.22,394 கோடி.

பிற மாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு வாடகை குடியிருப்புகள் அமைக்கப்படும்.

ஜி.எஸ்.டி வரியை நடைமுறைப்படுத்தும் போது, தமிழகம் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும்.

தமிழ்நாடு நகர்ப்பு மருத்துவ திட்டத்துக்கு ரூ.126 கோடி ஒதுக்கீடு.

பிறந்த குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை கண்டறிய சென்னை, சிவகங்கையில் முன்னோடித் திட்டம்.

ரூ.43. 76 கோடியில் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

பிரதம மந்திரி வீட்டு, வசதி திட்டத்தில் 1.70 லட்சம் மதிப்பில் 1.76 லட்சம் வீடுகள்.

குறைந்த விலையிலான பொது மருந்து கடைகள் அமைக்கப்படும்.

சிறு,குறு,நடுத்தர தொழில்துறைக்கு ரூ.532 கோடி ஒதுக்கீடு.

முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ. 1,348 கோடி ஒதுக்கீடு.

குடிசை மாற்று வாரிய பழைய குடியிருப்புகள், மறு கட்டுமானம் செய்யப்படும்.

மருத்துவக் கல்வி பட்டமேற்படிப்பு இடங்கள் 1,188-ல் இருந்து 1,362 ஆக உயர்வு.

12 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.

பசுமைகள் வீடுகள் திட்டத்தில் ரூ.420 கோடியில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 24.28 லட்சம் கழிவறைகள் கட்டப்படும்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 50 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்படும்.

நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு.

முதலீடு ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ.1,295 கோடி.

வறட்சியை சமாளிக்க புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும். ஏற்கெனவே உள்ள ஆழ்துளை கிணறுகள் புனரமைக்கப்படும்.

உபரி காற்றாலை மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு கொண்ட செல்ல சிறப்பு வழித் தடம்.

தருமபுரியில் ஒரு உணவுப் பொருள் குழுமம் வழங்கப்படும்.

மூலதன மானியம் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்க தொழில்துறைக்கு ரூ.1,950 கோடி ஒதுக்கீடு.

காஞ்சிபுரம் மற்றும் கரூரில் தலா ஒரு ஜவுளி குழுமம் அமைக்கப்படும்.

ராமேஸ்வரத்தில் கடல் உணவுப் பொருள்கள் குழுமம் அமைக்கப்படும்.

ரூ 1 லட்சம் செலவில் கிராம கோயில் புதுப்பிக்கப்படும்.

நீர்வளத்துறைக்கு ரூ.4,971 கோடி ஒதுக்கீடு.

அவினாசி-அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ. 250 கோடி ஒதுக்கீடு.

மெட்ரோ ரயில் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வரை விரிவு.

சோழிங்கநல்லூரில் புதிய தொழில்நுட்ப பூங்கா.

தொழில் துவங்குவதற்கான ஒற்றைச் சாளர முறை மேலும் வலுப்படுத்தப்படும்.

கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் திட்டம் தொடர்ந்து வழங்கப்படும்.

காஞ்சிபுரத்தில் ரூ.130 கோடி செலவில் 330 ஏக்கர் பரப்பளவில் மருத்துவப் பூங்கா அமைக்கப்படும்

107.5 கி.மீ தொலைவுக்கு 3 புதிய மெட்ரோ வழித்தடங்கள் அமைக்க நடவடிக்கை.

உதய் மின் திட்டத்தில் இணைந்ததால் கடன் வட்டி குறைந்து ரூ. 1,335 கோடி சேமிக்கப்படும்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்தாண்டு நடத்த ரூ.75 கோடி ஒதுக்கீடு.

சாலைகள் அகலப்படுத்த மற்றும் புதிய பாலங்கள் கட்ட ரூ.3,100 கோடி ஒதுக்கீடு.

100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்.

நீர்வள ஆதராங்களுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு.

தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவை, 34 லட்சம் ஏக்கரில் இருந்து 39 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.

உலகவங்கி உதவியுடன் ரூ. 3,042 கோடியில் நீர், நில வளத்துக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தாமிரபரணி, நம்பியாறு அணைகளை இணைப்புக்கு ரு.300 கோடி

சென்னை, புறநகர் சாலைத் திட்டங்களுக்கு ரூ.744 கோடி.

ராமநாதபுரம் மூக்கையூரில் புதிய மீன்பிடி துறைமுகம்.

குடிமராமத்து பணிகளுக்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு.

சாலை பாதுகாப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

ரேஷன் கடையில் பருப்புகள் தொடர்ந்து மானிய விலையில் வழங்கப்படும்.

உணவுப் பொருள் மானியத்துக்காக ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.

அரசின் சார்பில் விலைக் கட்டுப்பாடுக்கு புதிய பொருள்கள் விற்கப்படும்.

ஏழைகளுக்கு 12,000 பசுகள், 6,000 ஆடுகள் வழங்கப்படும்.

கடல் அரிப்பை தடுக்க ரூ.20 கோடியில் புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தப்படும்.

கோழிப்பண்ணை வளர்ச்சிக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு

2 லட்சம் விவசாயிகள் பயன்படும் வகையில் உழவர் உற்பத்திக் குழு அமைக்கப்படும்.

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலிந்தோர் நிவாரண உதவி ரு.20,000 ஆக உயர்வு.

பயிர் காப்பீடு மானியத்திற்கு ரூ. 522 கோடி நிதி ஒதுக்கீடு

பள்ளிக் கல்வித்துறைக்கு ரு.26,932 கோடி

விதை உற்பத்தியை வலுப்படுத்த ரூ.50 கோடியில் திட்டம்.

ஆவின் பால் பொருள்களை பிரபலப்படுத்த 200 புதிய பாலகங்கள்.

நாட்டு மாடு இனப்பெருக்கத்துக்கு புதிய திட்டம்.

வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட கூடுதலாக 500 மையங்கள் அமைக்கப்படும்.

உழவர் உற்பத்திக் குழுவுக்கு ரூ.100 கோடி.

2 லட்சம் விவசாயிகள் பயயன்படும் வகையில் உழவர் உற்பத்திக் குழு

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலிந்தோர் நிவாரண உதவி ரு.20,000 ஆக உயர்வு.

பயிர் காப்பீடு மானியத்திற்கு ரூ. 522 கோடி நிதி ஒதுக்கீடு

பள்ளிக் கல்வித்துறைக்கு ரு.26,932 கோடி

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ரூ.988 கோடி நிதி

2017-18-ல் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை தயாரிக்க திட்டம்.

10,500 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி

இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.165 கோடி.

ஆதி திராவிடர் நலன்துறைக்கு ரூ.3,009 கோடி

இ- சேவை மையங்கள் மூலம் 500 விதமான சேவைகள்

ஏழைக்குடும்பங்களுக்கு 3.5 லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.

ஐடி துறைக்கு ரூ.116 கோடி

போக்குவரத்துறைக்கு ரூ.2,191 கோடி

100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி

கால்நடை பராமரிப்புக்கு ரூ. 1,161 கோடி

உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு

நெடுஞ்சாலை துறைக்கு 10,067 கோடி ஒதுக்கீடு

குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி

மாநில பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்கான சட்டத்தை மாநில அரசு இயற்றும் - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் ரூ.13,14,366 கோடி கடன் உள்ளது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் தினகரனுக்கு நன்றி தெரிவித்தார், இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சரியாக 10.30 மணியளவில் தொடங்கியது.

தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக சட்டசபை கிளம்பிய நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார், நிதிநிலை அறிக்கை அடங்கிய பெட்டியை ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து வணங்கினார்.