Share with Friends

Live Feed

Last update 0.25mins ago

ஆர்.கே நகரில் வெற்றி பெற்றுள்ள தினகரன் அதற்காக சான்றிதழை தேர்தல் ஆணையரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

தினகரன்(சுயேட்சை) - 89,013

அதிமுக - 48,306

திமுக - 24,651

நாம் தமிழர் கட்சி - 3,860

நோட்டா - 2,373

பாஜக - 1,417

தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தனது ஆதரவாளர்களுடன் வந்து தினகரன் வாங்கிகொண்டார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் 35,545 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி. தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.

16வது சுற்றின் முடிவில்,

டிடிவி தினகரன்- 78855

மதுசூதனன்- 41529

மருது கணேஷ்- 21827

கலைக்கோட்டுதயம்- 3535

நோட்டா- 2096

கரு.நாகராஜன்- 1185

கடந்த 2016 ஆர்.கே.நகர் தேர்தலுடன் ஒப்பிடுகையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை இழந்திருக்கிறது திமுக

வாக்கு வித்தியாசம் 35 ஆயிரத்தைக் கடந்தது. 16வது சுற்று முடிவில், 35,175 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார் தினகரன்.

சுயேச்சை வேட்பாளர் தினகரன் 44,094 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார், டெபாசிட்டை தக்கவைத்துக் கொண்டது அதிமுக

டிடிவி தினகரனின் வெற்றியை கொண்டாடும் ஆதரவாளர்கள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 20161 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார் டிடிவி தினகரன்.

இதற்கு ஜெயலலிதா வீடியோ தான் காரணம் என பலரும் கூறிவருகின்றனர்.

ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் ஜெயலலிதா நினைவு இடத்தில் மரியாதை செலுத்துகின்றார்.

டிடிவி தினகரன் தொடர்ச்சியாக முன்னிலையில் இருப்பதால், பெண்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர். மேலும் படிக்க

7 வது சுற்று முடிவிலும் டிடிவி தினகரன் முன்னிலை

டிடிவி தினகரன்- 34346

மதுசூதனன்- 17471

மருதுகணேஷ்- 9206

கலைக்கோட்டுதயம்- 1509

கரு.நாகராஜன்- 485

துரோகம் என்றுமே வெற்றி பெறாது என்பதற்கான உதாரணம் தான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்- டி. ராஜேந்தர்

இது மக்கள் கொடுத்த வெற்றி, இனிமேல் தொண்டர்களை பற்றி பேச யாருக்கும் தகுதி கிடையாது- நடிகர் செந்தில்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 4-வது சுற்று முடிவில் 20,298 வாக்குகள் பெற்று தினகரன் தொடர்ந்து முன்னிலை.

அதிமுக - 9672, திமுக - 5032, நாம் தமிழர் - 737, பாஜக - 220, நோட்டா - 333.

மூன்றாவது சுற்று முடிவுகள்

டிடிவி தினகரன்- 15,868

மதுசூதனன் - 7033

மருது கணேஷ் - 3750

கலைகோட்டுதயம் - 459

கருநாகராஜன் - 117

மூன்று மாதத்தில் மக்கள் விரோத ஆட்சி போய்விடும். டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

பெசன்ட் நகரில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

2ம் சுற்று நிலவரப்படி,

டிடிவி தினகரன்- 10,421

மதுசூதனன்- 4521

மருதுகணேஷ்- 2383

கலைக்கோட்டுதயம்- 258

தோல்வி பயத்தில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணியினர் மோதலில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கருத்துகணிப்பை உண்மையாக்கிய டிடிவி தினகரன்- மேலும் படிக்க

ஆர்.கே.நகரில் வாக்கு விற்பனை வெற்றிகரமாக நடந்துள்ளது- தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்! அதிமுக பெண் முகவர்கள் உட்பட நால்வர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காலை 9 மணிநேர நிலவரப்படி,

டிடிவி தினகரன்- 5399

மதுசூதனன்- 2737

மருதுகணேஷ்- 1181

கரு.நாகராஜன்- 10

திமுக - மருதுகணேஷ்- 92 வாக்குகள்

அதிமுக - மதுசூதனன்- 257 வாக்குகள்

சுயேட்சை - டிடிவி தினகரன்- 600 வாக்குகள்

பாஜக - கரு.நாகராஜன் - 6 வாக்குகள்

ஆர்.கே நகரில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 41.6% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஆர்.கே.நகர் இதுவரை பதிவான வாக்குகள் மொத்தம்: 60029

ஆண்கள்: 30,973

பெண்கள்: 29,052

மற்றவர்கள்: 4

தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக இன்னமும் புகார் வருவதாக தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார்

ஆர்.கே.நகரில் காலை 10 மணி நிலவரப்படி 10.99% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கோனி தெரிவித்துள்ளார்.

வாக்குச்சாவடிக்கு நாயுடன் வந்த ஆர்.கே.நகர்வாசி ஒருவரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது, நாயுடன் அனுமதிக்க முடியாது என பொலிசார் கூறியதால் நண்பரிடம் நாயை ஒப்படைத்துவிட்டு வாக்களித்தார்.

வாக்களித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள் என கூறினார்.

ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வாக்களிக்க சென்ற வாக்குச்சாவடியில் படம் பிடிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, உள்ளே சென்ற செய்தியாளர்களை தடுத்து பொலிஸ் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

செரியன் நகர் வாக்குசாவடியில் டிடிவி தினகரன் தனது வாக்கினை செலுத்தியுள்ளார். இதன்பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வாக்குபதிவு இயந்திரத்தில் எண்கள் சரியாக இல்லை என புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

வாக்களித்த பின் பேட்டியளித்த மருதுகணேஷ், இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறும் என நம்புகிறோம், ரூ.6 ஆயிரம் அல்ல, ரூ.60 ஆயிரம் கொடுத்தாலும் ஆர்.கே. நகர் மக்கள் ஏமாற தயாராக இல்லை என கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பி.ஜே.பி-யின் கரு.நாகராஜன், டி.டி.வி. தினகரன் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள்.

மொத்தம் 258 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது, வாக்குச்சாவடிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் துணை ராணுவப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

ஆர்.கே.நகரில் மொத்தம் 2,28,234 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.

பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில், தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் வாக்களித்தார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது.