2018 ஆம் ஆண்டு இந்திய மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது.
வாக்குப்பதிவு விவரங்கள்குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, அதிகபட்சமாக திரிபுராவில் 81 புள்ளி 8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதற்கு அடுத்து மேற்குவங்கத்தில் 81 சதவீதம் வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்சமாக பீகாரின் 4 மக்களவைத் தொகுதிகளில் 50 சதவீதம் பதிவாகி இருக்கிறது.
அருணாசலப்பிரதேசத்தின் 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் லட்சத்தீவின் ஒரு மக்களவைத் தொகுதியில் 66 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
மகாராஷ்ட்ராவின் ஏழு மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 56 சதவீத வாக்குகள் பதிவாகின. மேகாலயாவின் இரண்டு தொகுதிகளில் 67 புள்ளி 16 சதவீதமும், ஒடிசாவின் 4 தொகுதிகளில் 68 சதவீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசத்தின் எட்டு தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 63 புள்ளி 69 சதவீத வாக்குகளே பதிவாகின. நக்சலைட் அச்சுறுத்தல் காரணமாக சட்டிஸ்கரின் பஸ்தர் தொகுதியில் 57 சதவீத வாக்குகள் பதிவாகின. தீவிரவாதிகளின் மிரட்டல்களை மீறி ஜம்மு காஷ்மீரில் 54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
நக்சல் அச்சுறுத்தல் காரணமாக ஒடிசாவின் மல்காங்க்ரி மாவட்டத்தில் உள்ள 6 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. இறுதி வாக்குப்பதிவு சதவீதம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஆந்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் இரவு பத்துமணிக்கு மேலும் வாக்குப்பதிவு நீடித்தது.
குண்ட்டூர், கிருஷ்ணா உள்ளிட்ட மாவட்டங்களில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் வாக்குப்பதிவு தாமதமானது.
ஆனாலும் வாக்காளர்கள் சோர்வடைய வில்லை. மாலை 6 மணிக்கு மேலும் 400 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கோபல் கிருஷ்ணா தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பதிவானதைப் போலவே, வாக்கு சதவீதம் இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவர் பலியானார்.
திரிபுரா - 53.17%
லட்சத்தீவுகள்: 51.25%
நாகலாந்து - 68%
மணிப்பூர் - 68.9%
உத்தரகாண்ட் - 46.59 %
தெலுங்கானா -48.95%
அருணாச்சல பிரதேசம் - 59.5%
அசாம் - 59.5%
ஆந்திரா - 62 %
உ.பி., - 50.6%
மேற்கு வங்கம் - 69.94%
மாநில வாரியாக பதிவான வாக்குகளின் நிலவரத்தை தேர்தல் கமிஷன் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
காலை 12 மணி நிலவரப்படி
மணிப்பூர் - 35.03 %
மேகாலயா - 27 %
அருணாச்சல் - 27.48%
உத்தரகாண்ட் - 23.78%
நாகலாந்து - 41%
உலகிலேயே குள்ளமான பெண் என அழைக்கப்படும் 25 வயதான ஜோதி அம்கே, தனது பெற்றோர், குடும்ப உறுப்பினர்களுடன் நாக்பூரில் ஒரு பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
அனைத்து மக்களும் முதலில் வாக்களித்துவிட்டு அதன்பின் உங்களின் மற்ற பணிகளை கவனிக்கலாம் என கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பேண்டு வாத்தியம் முழங்க மலர் தூவி வாக்காளர்களை வரவேற்றது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில்,மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி உள்ளது. முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள மக்கள் சாதனை படைக்கும் அளவில் பெரிய எண்ணிக்கையில் வந்து வாக்கினை பதிவு செய்ய வேண்டும்.
குறிப்பாக முதல் முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள், அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
2019 Lok Sabha elections commence today.
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 11, 2019
I call upon all those whose constituencies are voting in the first phase today to turn out in record numbers and exercise their franchise.
I specially urge young and first-time voters to vote in large numbers.
அமரவாதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கினை பதிவு செய்தார்.
தனது குடும்ப உறுப்பினர்களுடன் வந்து சந்திரபாபு நாயுடு வாக்களித்தார்.
ஹைதராபாத்தில் காலை 7.30 மணிக்கு வாக்களிக்க வந்த நடிகை அமலா அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வாக்குசாவடி பணிகள் சரியாக இருந்ததாகவும், காலையில் கூட்டம் இல்லை...ஐ லவ் இந்தியா என பதிவிட்டுள்ளார்.
Voted !! Thank you Hyderabad , nice arrangements , no crowd at 7.30 am , no stress . I love India ❤️ pic.twitter.com/DAkHzzCunF
— Amala Akkineni (@amalaakkineni1) April 11, 2019
மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஆந்திராவில் இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது
ஆந்திராவின் குண்டக்கல் சட்டமன்றத் தொகுதியில் ஜன சேனா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதன் குப்தா இன்று காலை வாக்குப்பதிவு செய்ய வந்தபோது, அதிகாரிகளிடம் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வாக்குச்சாவடியில் இருந்த ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தை தூக்கி தரையில் போட்டு உடைத்துள்ளார்.
இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் பலத்த பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசம், காஷ்மீர், மேற்கு வங்காளம், அந்தமான், லட்சத்தீவுகளில் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது.
ஆந்திராவில் அரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது.
அரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில் சில இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரையில் வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு ஒரு சில இடங்களில் மட்டும் மாலை 4 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்து விடும்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.
ஒடிசா, பீகார், சத்தீஷ்கார், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் ஓட்டுப்பதிவு 7 மணிக்கு தொடங்கினாலும், முடிவது மாலை 3 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலங்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வட கிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசல பிரதேசம், மிசோரம், சிக்கிம், திரிபுரா, மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா ஆகிறவற்றில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் வாக்குப்பதிவு இடைவெளியின்றி தொடர்ந்து நடக்கிறது.
இன்று ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பிஹார், சத்தீஸ்கார், ஜம்மு காஷ்மீர், மகாராஸ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிஸா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
18 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 91 தொகுதிகளுக்கு நடைபெறும் இன்றைய தேர்தலில் 14.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,729 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர்.
இந்தியாவின் 17 வதுஇந்தியாவின் 17 வது மக்களவை தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. மக்களவை தேர்தல் இன்று தொடங்கியுள்ளது.