Share with Friends

Live Feed

Last update 0.25mins ago

வாக்குப் பதிவு நிறைவு

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது.

மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8.00 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது

6 மணிக்குள்ளாக வாக்குச் சாவடிக்கு வந்தவர்களுக்கு வாக்களிக்க டோக்கன் வழங்கப்பட்டுள்ளது

மிகப் பெரிய அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நிறைவு பெற்றது வாக்குப் பதிவு நிறைவுபெற்றது.

5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

5 மணி வரை புதுச்சேரியில் 67.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன

அதிகபட்சமாக சிதம்பரத்தில் 70.73 சதவீத வாக்குகள் பதிவு

குறைந்த பட்சமாக கன்னியாகுமரியில் 55.07 சதவீத வாக்குகள் பதிவு

விடுபட்ட பெயர்களை எதிர்காலத்தில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

இந்த தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும் என நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

இந்த தேர்தல் பெரிய திருவிழாவுக்கு சமம். நான் கடைசி ஆளாக வந்து வாக்குப்பதிவு செய்யலாம் என்று நினைத்தேன். மக்களுக்கு நாம் எதுவும் சொல்லத்தேவையில்லை. அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.

தற்போது, உலகம் உள்ளங்கைக்கு வந்துவிட்டது. யாரிடமும் கேட்டு வாக்குப்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த அளவுக்கு முன்னேறிவிட்டது.

இந்த தேர்தல் முடிந்தவுடன் கடுமையான மழை பெய்யும், ஏனெனில் மக்களுக்கு நல்ல விடிவுகாலம் வரும் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

மதுரை தவிர்த்து தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு!

3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

நாமக்கல்லில் அதிகபட்சமாக 61.47 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

நீலகிரி தொகுதியில் 50.02 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 55.97 சதவீத வாக்குகள் பதிவு.

புதுக்கோட்டை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இணைப்புகளை மாற்றி ஓட்டுக்கள் மாற்றப்பட்டுள்ளது என்று அ. ம.மு.க வேட்பாளர் சாருபாலா மச்சுவாடி பூத்தில் வக்குப்பதிவினை நிறுத்தவேண்டும் என்று முற்றுகையில் ஈடுபட்டுள்ளார்.


மாலை 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும் கூட்டணி திட்டம் - தேர்தல் ஆணையம் மற்றும் டிஜிபிக்கு, திமுக புகார்

அதிமுக கூட்டணியில் தேர்தல் ஆணையத்திற்க்கு 2 சீட் குடுத்திருக்கலாம் : உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளிலுள்ள சிசிடிவிக்களை செயலிழக்கச் செய்ய அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் மனு அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி அருகேயுள்ள திருவதிகையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தற்காலிகமாக வாக்குப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள வாக்குச்சாவடியில் முருகேசன் என்ற முதியவர், வாக்களித்துவிட்டு வெளியே வந்ததும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதேபோல் சேலம் மாவட்டம் வேடப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த முதியவர் கிருஷ்ணனும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு மனைவியுடன் வாக்களிக்க வந்த நடிகர் சத்யராஜ், வரிசை தெரியாமல் நீண்ட நேரம் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

"தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 39.49% சதவிகித வாக்குப்பதிவு...!"

11 மணி நேரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஆரணியில் 36 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தலை புறக்கணித்த மக்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேகே புதூர் கிராமத்தில் ஒருவர் கூட வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

இதனால் வாக்கு சாவடி மையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. தங்களுடைய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. எனவே வாக்குப்பதிவு செய்ய மாட்டோம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ கழிவுகள் தங்கள் பகுதியில் கொட்டப்படுவதை அகற்ற வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாக உள்ளது.

மறைந்த கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் கோபாலபுரம் வாக்குசாவடியில் தனது வாக்கினை வீல் சேரில் வந்து பதிவு செய்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது வாக்கை பதிவு செய்தார் நடிகை த்ரிஷா.

கருணாநிதி இல்லாமல் முதல் முறையாக வாக்களிக்க வந்த தயாளு அம்மாள்.என் பெயர் பட்டியலில் இல்லையா? இது யாருடைய தவறு; மற்றொரு ’சர்கார்’ வந்தால் தான் இதற்கு தீர்வா? - நடிகர் ரமேஷ் கண்ணா

சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்துடன் வாக்குப்பதிவு!

"எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகின்றன" என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்று வரும் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெறுவோம்- டிடிவி தினகரன்


தேர்தல் நாளை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் முதன்முறையாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 103 ஆண்கள் மற்றும் 56 பெண்கள் உட்பட மொத்தம் 159 பேர் இதில் வாக்களிக்க உள்ளனர்.

தமிழகத்தில் காலை 9 மணி வரை 13.48 சதவிகிதம் வாக்குப்பதிவு


தேனி மாவட்டம் போடி அருகே மலைக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்படாததை காரணத்தால் மக்களவை தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

தனது மனைவியுடன் வாக்குப்பதிவு செய்ய வந்த அஜித்தை பார்த்தவுடன் ரசிகர்கள் தல தல என்று கத்தி ஆரவாரம் செய்தனர். இதனைப்பார்த்த அஜித், கையெடுத்து கும்பிட்டு நகர்ந்து செல்லுங்கள் என கூறியுள்ளார்.

அதுபோன்று நடிகர் விஜய்யும் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்களித்தார் கனிமொழி.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மகள் ஸ்ருதிஹாசனுடன் வாக்களித்தார் மநீம தலைவர் கமல்...!

தி நகர் இந்தி பிரச்சாரசபையில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் வாக்களித்து வருகின்றனர்.

மக்களோடு மக்களாக நின்று தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் விஜய்

சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலியுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதேபோல், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இதுதவிர அ.ம.மு.க மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.

தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து இருக்கிறது.