Share with Friends
லாவோ
லாவோ

உலகின் உள்ள ஏழை நாடுகளில் 44வது இடத்தில் உள்ள இந்நாடானது வாழ ஏற்ற நாடு இல்லை எனும் பட்டியலில் உள்ளது.கம்யூனிச ஆட்சி நடைபெறும் இந்நாட்டில் அரசின் விதிகள் வீழ்ச்சியடைந்து பயனற்றதாகவே உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் பட்டினியால் இறக்கின்றனர்.

சிரியா
சிரியா

அதிக அளவு போர்களும், பொருளாதார வீழ்ச்சியும் உள்ள நாடான சிரியா மக்கள் வாழ்வதற்கு ஏற்றதற்றதாக உள்ளது.அதிகளவு தீவிரவாதம் நிறைந்த இந்நாடானது பாதுகாப்பற்றதாக கருதப்படுகிறது.

மொசாம்பிக்
மொசாம்பிக்

ஆப்பிரிக்காவில் உள்ள இந்த நாட்டில் சுத்தமற்ற குடிநீரால் மலேரியா போன்ற நோய்கள் பரவுகிறது.மேலும் அதிக அளவில் எய்ட்ஸ் நோயாளிகளும் உள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு
மத்திய ஆப்பிரிக்க குடியரசு

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் எல்லையாக உள்ள காங்கோ, சுடான், போன்ற நாடுகளும் வாழ ஏற்றதற்ற நாடுகளின் பட்டியலில் தான் உள்ளது.இங்கு நிலவும் போர் சூழல் மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்றதாக உள்ளது. மேலும் சுகாதாரமற்ற சூழல், நீர் போன்றவற்றினால் மக்கள் அதிகளவில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மியான்மர்
மியான்மர்

வடகிழக்கு நாடுகளில் ஒன்றாக அமைந்துள்ள மியான்மரில் கடுமையான இராணுவ ஆட்சிமுறை நடைமுறையில் உள்ளதால் மக்களுக்கு தனிப்பட்ட உரிமைகள் அதிகாரங்கள் மறுக்கப்படுகிறது.மியான்மரானது 30 ஏழை நாடுகளின் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.

சாட்
சாட்

ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்றான சாட்டில் ஆப்பிரிக்காவின் நீர் ஆதாரமான சாட் ஏரியானது அமைந்துள்ளது. ஆனால் தற்போது அந்த ஏரியானது வறண்டு இருப்பதால் பஞ்சம், வறட்சியானது நிலவுவதால் மக்கள் அந்நாட்டில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

காங்கோ
காங்கோ

ஜனநாயக ஆட்சி நடைபெறுகின்ற காங்கோவில் அதிகளவு போர் நடைபெறுகிறது. உலகின் உள்ள நாடுகளில் அதிகளவு கனிம வளங்களை கொண்டிருந்தும் ஏழை நாடுகளின் பட்டியலில் இரண்டாவது நாடாக காங்கோ உள்ளது.

சூடான்
சூடான்

சூடான் நாடானது இனப்படுகொலை காரணமாக பாதுகாப்பற்றதாக கருதப்படுகிறது. தெற்கு கிறிஸ்துவர்களுக்கு இஸ்ஸாமியருக்கும் இடையே நடக்கும் மதப்பிரச்சனைகள் காரணமாக இங்கு அதிகமாக இனப்படுகொலைகள், கற்பழிப்பு போன்ற சம்பங்களும் அதிகமாக உள்ளது.

ஜிம்பாவே
ஜிம்பாவே

ஜிம்பாவே நாட்டில் காணப்படும் கடும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இது வாழ்வதற்கு ஏற்றதற்ற நாடுகளில் ஒன்றாக உள்ளது.

வட கொரியா
வட கொரியா

இந்நாட்டில் நிலவும் கடுமையான ஆட்சி முறை காரணமாக மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லை.குறிப்பிட்ட வயதிற்கு பின் கட்டாயமாக இராணுவத்தில் சேரவேண்டும், ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கு கட்டுபாடு இல்லாததால் அதிக அளவில் குற்றங்கள் நிகழ்கிறது.

1/10