Share with Friends

Live Feed

Last update 0.25mins ago

சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டத்தில் சாதகமா? பாதகமா? என்ற கேள்விகள் ஒருபுறமிருக்க, இதன் மீதான விவாதங்கள் நடைபெற்று டிசம்பர் மாதம் 10ஆம் திகதியின் வாக்கெடுப்பின் மூலமே இது நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த வரவுசெலவுத்திட்டத்தின் மீதான விவாதம் நாளை காலை 9 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது. நாளை தொடக்கம் 26 நாட்களுக்கு குறித்த வரவுசெலவுத்திட்டத்தின் மீதான விவாதம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தற்போது நிதி அமைச்சரால் வாசித்து முடிக்கப்பட்டது.

100 பொருட்களுக்கான தீர்வை குறைப்பு. இணையத்தளத்தின் மூலம் கொள்வனவு செய்யப்படும் பொருட்களுக்கு வரி அறவிடப்படும்.

சமூர்த்தியின் முலம் பயன்பெருவோருக்கு மாதாந்தம் 5 கிலோகிராம் அரசி.

இரவு 9 மணிக்குப்பிறகு அதிவேக நெடுஞ்சாலை கட்டணத்தில் 50 ரூபாய் குறைக்கப்படும், மேலும் ATM இல் பணம் எடுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மேலதிகமாக 5 ரூபா அறவிடப்படும்.

உள்நாட்டு பால் மா 400 கிராமின் விலை 250 ரூபாய். 425 கிராம் நிறையுடைய உள்நாட்டு டின்மீன் 125 ‌ரூபாய்.

பருப்பு 10 ரூபாவாலும், சீனி 2 ரூபாவாலும் ,கேஸ் 25 ரூபாவாலும், கிழங்கு 5 ரூபாவாலும், கருவாடு 5 ரூபாவாலும், மண்ணெண்ணெய் 5 ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நெத்திலி 5 ரூபாவாலும், பயறு 15 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

100 சதொச விற்பனை நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு 500 மில்லியன் ஒதுக்கீடு.

பொருட்களின் விலைகள் குறைவடைகின்றன, அதற்கான பட்டியலையும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

கிராம சேவகர்கள் உள்ளிட்ட அரச சேவையாளர்களுக்கான 1000 சேவை நிலையங்களை அமைப்பதற்கு 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

சிறு குளங்களை அபிவிருத்தி செய்வதற்கு 3000 மில்லியன் ஒதுக்கீடு.

பெல்மடுல்லையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அமைக்கத்திட்டம்.

நீதிமன்றங்களின் புனரமைப்பு மற்றும் நிர்மாணப்பணிகளுக்காக 1750 மில்லியன் ஒதுக்கீடு

சமய ஸ்தலங்களை அபிவிருத்தி செய்வதற்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பதற்கு 25 மில்லியன் ஒதுக்கீடு. வெளிநாட்டு தொழிலாளர்களின் ஆகக்குறைந்த ஊதியமாக 300 டொலர் வழங்க திட்டம்.

பொது சேவைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஒரு குழு நியமிக்கப்படும்.

சுகததாச விளையாட்டு அரங்கத்தை அபிவிருத்தி செய்வதற்கு 150 மில்லியன் ஒதுக்கீடு. தியகம விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் ஒதுக்கீடு

ஊடகத்துறையில் உள்ளவர்களுக்கு 300,000 ரூபாய் கடன் வசதி திட்டம், ஊடகவியலாளர்கள், உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு, 50 வீத மானியத்தின் கீழ், 150,000 ரூபாய் கடன்.

காலஞ்சென்ற பண்டித் அமரதேவ பயிற்சி நிருவனம் ஒன்றை அமைப்பதற்காக 25 மில்லியன் ஒதுக்கீடு. புதிய பிக்குகளுக்கு புலமைப்பரிசில் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் 2500 ரூபா வீதம் 50 மில்லியன் ஒதுக்கீடு.

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 150 மில்லியன் ஒதுக்கீடு.

மேலும் நாட்டிலுள்ள புகையிலை நிறுவனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு 500 மில்லியன் கொடுக்க வேண்டும்.

புகையிரத சேவையில் முற்கொடுப்பனவு அட்டையை அறிமுகப்படுத்த திட்டம்.

இளைஞர் பயிற்சி நிலையங்களை அமைப்பதற்காக 4000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

ஒரு நாளைக்கு 2 அமெரிக்க டொலர் வருமானத்தை பெறும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள். இதற்காக 1221 மில்லியன் ரூபா ஒதுக்கீடு, வாழ்க்கைப்பூராகவுள்ள அக்ரஹார திட்டத்தை நீடிக்க திட்டம்

யுத்தத்தின் போது சிறப்பாக செயற்பட்ட இராணுவ வீரர்களுக்கு 3500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

மாடி வீடுகளை கொள்வனவு செய்ய வெளிநாட்டவர்களுக்கு 40 வீதம் கடன்.

சமூர்த்தி திட்டத்தை “ஜன இசுறு” வாக மாற்ற திட்டம்

தேசிய சேமிப்பு வங்கி மற்றும் வீடமைப்புத்துறை வங்கி ஆகியன ஒன்றிணைந்து 7 சதவீதக் கடன் திட்டத்தை வழங்குவதற்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, அரச வீடமைப்புத்திட்டத்தின் கீழ் 10 வருடத்திற்கு மேலாக ஒரே வீட்டில் இருப்பவர்களை இடமாற்றம் செய்ய தீர்மானம்.

வடக்கு கிழக்கில் வீடமைப்புத் திட்டத்திற்காக 5 000 மில்லியன் ஒதுக்கீடு, தனி வீட்டுத் திட்டத்தில் முதலில் 5 இலட்ச வீடுகள் : மலையகத்துக்கு 25 ஆயிரம் வீடுகள்.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்நாட்டு விமான சேவை. கிராமிய வங்கிகள் மற்றும் திவிநெகும வங்கிகளை ஒன்றிணைத்து சக்திமிக்க சிறு கடன் வழங்கும் வங்கிக் கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை

மின்சாரத்தை குறைந்த விலையில் மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பது உறுதி செய்யப்படும்

நிதி முகாமைத்துவம் தொடர்பான நிறுவனமொன்று உருவாக்கப்படும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிமுகப்படுத்தப்படும்.

2018ஆம் ஆண்டளவில், புகையிரதம் மற்றும் இலங்கை போக்குவரத்துக்குச் சேவைகள் சுய நிதியுதவியில் இயங்கும், முச்சக்கரவண்டி மற்றும் வான்களை கட்டுபடுத்த திட்டம்.

10 வருடங்களுக்கும் பழமையான ஹொட்டல்களுக்கு மீள் புனரமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு,

பாடசலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான்களுக்கு பதிலாக 35 இருக்கைகளை கொண்ட பஸ்களை அறிமுகப்படுத்துவதற்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

விஞ்ஞானம் தொழில்நுட்பங்களுக்காக 1306 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு, இலத்திரனியல் கார்களை அறிமுகப்படுத்துவற்கு 2 பில்லியன் ரூபாய் அறிமுகம்

நெனோ தொழில்நுட்பத்தை இலங்கையிலுள்ள கல்வி நிறுவகங்களில் அறிமுகப்படுத்துவதற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

சுற்றுலா வலையங்களான பதுளை, எல்ல, பண்டாரவளை போன்ற இடங்கள் அபிவிருத்தி செய்யப்படும், சுற்றுலா விடுதிகளில் குறைந்த அறைக் கட்டணம் இனங்கண்டு அறிவிக்கப்படும்.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் எயார் லைன்ஸ் விமான சேவையை வர்த்தக ரீதியாக்கப்படும்

அரச வியாபாரங்களை அபிவிருத்திச் செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய்

15 தொழிற்துறை ஏற்றுமதி கிராமங்கள் ஸ்தாபிக்கப்படும்,

நிதியமைச்சினால் பெருநகரங்களுக்காக 750 மில்லியன் ரூபாய் நேரடி முதலீடு

இலங்கையை, ஆசியாவின் ​கேந்திர மத்திய நிலையமாக்கப்படும். கடல் மையங்கள் குறித்து முக்கிய நோக்கம் செலுத்தப்படுகின்றன. கடல் சார் அதிகாரங்கள் நிறுவப்படும்

கொழும்பு வர்த்தகக் கண்காட்சியை அடுத்த வருடம் நடத்துவதற்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

இலங்கையின் பெயரை பிரசித்தபடுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

வடக்கு தெற்கில் 250 தொழில் வாய்ப்புகளை பெறுவதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

சிறப்பான முதலீட்டாளர்களுக்கு 5 வருடங்களுக்கான விசா,

தொழிநுட்ப இயந்திரங்களின் இறக்குமதிக்காக 75 சதவீத வரி விடுவிப்பு.

100 மில்லியன் மற்றும் 500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை மேற்கொள்ளுபவர்களுக்கு விசேட ஊக்கச்சலுகைககள் வழங்கப்படும்

மெகா பொலிஸ் திட்டத்துக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

ஆடை , நெசவு தொழிலின் அபிவிருத்திக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுக்க பரிந்துரை , அதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

செல்வத்தை உருவாக்க புதிய கொள்ளை உருவாக்கப்படும். வடக்கில் வர்த்தகங்களை முன்னெடுப்பதற்கு 200 சதவீதமான முதலீட்டு கொடுப்பனவுகள்.

உப்பு உற்பத்தி நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை. செலவாணி கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு மாற்றீடு கொண்டுவரப்படும்

தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு 5 நாட்கள் (45 மணி நேரம்)வேலை

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் மத்திய ஓய்வூதிய நிதி சீரமைக்கப்படும், சிறிய மற்றும் நடுத்தர மக்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை.

கடைகள் இரவு 11 மணி வரை திறந்து வைக்கப்படுதல் வேண்டும், சிறு வியாபாரிகளுக்கு சலுகைக் கடன்கள் பெற்றுக்கொடுக்கப்படும்.

ஒவ்வொரு நோயாளியும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது, சிகிச்சைக்காக செலவு செய்யப்பட்ட செலவு தொடர்பிலான பற்றுச்சீட்டை பெற்றுச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

500,000 ரூபாய் பெற்று அதனால் அவதிப்படுவோர்க்கு, வர்த்தகத்தை தொடர்ந்து செய்துக்கொண்டு செல்ல அனுமதி. வணிகங்களை பதிவு செய்வதற்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பலர் பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு தவணையும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். வியாபாரங்களை மேற்கொள்வதற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும்.

இரவு 11 மணி வரைக்கும் தனியார்துறையினர் பஸ் போக்குவரத்தில் ஈடுபட இணக்கம்.

தேசிய அறக்கட்டளைக்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு, வைத்தியசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, 25 ஆயிரம் மில்லியன் ரூபா

தாதியர் பயிற்சி நிலையத்திற்கு 200 மில்லியன் ஒதுக்கீடு. அனைத்து மருந்தகங்களும் பதிவு செய்யப்படுதல் வேண்டும். இல்லையேல் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும்

சுகாதாரத்துறைக்காக 25000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. தொழில்சார் கல்விக்கான தரத்தை ஏற்படுத்துவதற்காக, 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பகிடிவதை குறித்து அறிவிப்பதற்கு நிலையங்கள் அமைக்கப்படும், அதற்காக 10 மில்லியன் ஒதுக்கீடு.

பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனத்துக்கு, இஸெட் புள்ளிகைகளை அடிப்படையாகக் கொண்டு இணையும் மாணவர்கள் 15 ஆயிரம் போருக்கு, 8 இலட்சம் ‌ரூபாய் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மாணவர்களுக்கு அனைத்து நாட்டிற்கான விசா நடைமுறைகளும் வழங்கிவைக்கப்படும்.

யாழ்ப்பாணம், ஜயவர்த்தனபுர, களனி, பேராதெனிய, ருஹுணு ஆகிய பல்கலைக்கழகங்களிலுள்ள பாடங்கள் தொடர்புடைய கல்விமுறைமை அறிமுகப்படுத்தப்படும்.

கராப்பிட்டி வைத்தியசாலையில்10 மாடி கட்டடம் நிர்மாணிப்பதற்காக 500 மில்லியன் ஒதுக்கீடு.

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை இரவு மணிவரையில் முன்னெடுக்க நடவடிக்கை, பல்கலைக்கழக மாணவர்களின் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக, 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

பல்கலைக்கழகங்களில் முதல் மூன்று இடங்களை பிடிக்கு மாணவர்களுக்கு சர்வதேசத்தில் உயர்கல்வியை கற்பதற்கு புலமைப்பரிசில். இதற்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

2020 ஆம் ஆண்டு தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் சேர்த்து கொள்ளப்படுவர். ருகுனு பல்கலைக்கழக வைத்தியபீட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்று அதிகராபிட்டிய வைத்தியசாலையில் புதிய கட்டடம் அமைக்க திட்டம்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகையை மாதாந்தம் 2500 ரூபாவின் அடிப்படையில், மொத்தமாக 30 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிலையங்களை உருவாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான ஒதுக்கீட்டு கட்டணத்தை 50 - 150 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக 175 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதார காப்புறுதிக்காக 2700 மில்லியன் ஒதுக்கீடு.

பாடசாலையில் படிக்கு எல்லா மாணவர்களுக்கும் சேமிப்பு கணக்குகள் ஆரம்பித்து கொடுக்கப்படும், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கேகாலை மற்றும் பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். பாடசாலை மாணவர்களுக்கு இலவச வை - பை மற்றும் டெப்கள் வழங்கப்படும்.

கல்வித்துறைக்காக 90,000 மில்லியன் ரூபாவும், மேலதிகமாக 17,840 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தர மற்றும் முதலாம் தர பாடசாலைகளின் அபிவிருத்தித்திட்டத்திற்காக 21,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக 5000 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை பொலன்னறுவை மாவட்டங்களில் நீர்ப்பாசனத்திட்ட அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

50 வேளான்மை ஆய்வு நிலையங்கள் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கும்புக்கன் ஓயா திட்டம் மொனராகலை மாவட்டத்தில் செயற்படுத்தப்படும்.

20 000 ஏக்கர் காணிகளை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கு 350 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

கிராமிய மட்டத்தில் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கோழி வளர்ப்பிற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

மொரகாகந்த மற்றும் உமாஓயா பல்நோக்குத் திட்டத்திற்கும் 60,045 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முடியும் தருவாயில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒன்றிணைந்த 100 நன்நீர் மீன்பிடி கிராமங்களை அமைப்பதற்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கோழி இறைச்சிக்கான விலை 420 ரூபா ஆகும்.

கரையோர பாதுகாப்பு அபிவிருத்தி வலையங்களுக்காக 1200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் களஞ்சியசாலை ஒன்றை உருவாக்குவதற்காக கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பால் உற்பத்தி அதிகரிப்பிற்கு 400 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் துறை முன்னேற்றத்திற்க்காக 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இறப்பர் நிறுவனத்திற்காக 50 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. தென்னை அபிவிருத்தி சபைக்கு 74 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

சீனி இறக்குமதிக்கான இறக்குமதித் தீர்வை, 2 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை, கரும்பு பயிர்ச்செய்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தின் காணிகள் வழங்கப்படும். ஒரு மெட்றிக் தொன் சீனி கொள்கலனுக்காக 5000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பால் பண்ணையாளர்களுக்கு ஒரு வீட்டுக்கு 10 மாடுகள் வழங்க திட்டம்,

ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கான கட்டணத்தை நாம் தடை யெ்வோம். பெருந்தோட்ட கம்பனிகள் 5000 ஏக்கர் அளவிலான நிலங்களை மாத்திரமே வைத்திருக்க முடியும்.

தேயிலை, இறப்பர், தென்னை போன்றவற்றின் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பழங்களின் உற்பத்திக்கு, பெறுமதி சேர் உற்பத்தி முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.

விவசாயத்துறையில் வருவாய்களை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களுக்கான நிலம் ஒதுக்கி கொடுப்பதற்காக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒரே துறையில் அல்லாது பல துறைகளில் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பழங்கள், மரக்கறிவகைகள்.

தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

ஓய்வூதியத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதில் அரசு கவனம் செலுத்தும். அதற்கான சிறந்த திட்டம் ஒன்றும் முன்வைக்கப்படும்.

தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வராமல், அரசியல் நோக்கத்துக்காக, மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள். வால்களை எதிர்நோக்குவதற்காக, எம்மிடமுள்ள தீர்வுகளை முன்வைப்போம்.

காலநிலை தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பான நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது.

வடக்கு கிழக்கில் உள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு 2020இல் முழுமையான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.

வரலாற்றிலேயே பொதுமக்களின் கருத்துகள் கேட்டு, அவர்களின் ஆலோசனைகள் உள்வாங்கப்பட்டுள்ள முதல் வரவு - செலவுத் திட்டம் இதுவாகும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு தனித்தனியாக அவதானம் செலுத்தி தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.

தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், இயந்திரம், ரோபோ, தகவல் தொழில்நுட்பம் போன்றன, நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியமானவை, வரவுசெலவுத்திட்டதின் பற்றாக்குறைகளை தீர்த்து வைப்பதில் முன்னுரிமை வழங்கப்படும்.

முதலீட்டுக்கான சூழலை வளர்ப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தும், குறிப்பாக நிலம், சுகாதாரம், கல்வி போன்றவற்றில் கூடிய கவனம் செலுத்தும்.

நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவற்கு நாம் நடவடிக்கை எடுப்போம், அனைத்துக்கும் ஒரு வருவாயை பெறுவதே இந்த வரவு-செலவுத்திட்டத்தின் தொனிப்பொருளாகும்

மீன்பிடி மற்றும் நீரகவலமூலத்திற்கு அரசு விசேட அவதானம் செலுத்தும்.

ஏற்றுமதியை அதிகரித்துக்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும், உயர் வேலைவாய்ப்புகளுக்கான வாய்ப்புகள் மற்றும் மாற்று வசதிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்

நாட்டுக்குள் ஒரு நட்புறவுள்ள பொருளாதாரத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும், அடுத்த தலைமுறைக்கான நல்லதொரு வரவு-செலவுத்திட்டமாக இது அமையவுள்ளது என தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு சற்றுமுன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகைத்தந்தார்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்றுமுன் பாராளுமன்றத்திற்கு வருகைத்தந்தார். 2017ஆம் ஆண்டக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மீதான வாசிப்பை ஆரம்பித்தார்.

வரவு செலவுத்திட்டத்தின் மீதான வாசிப்பு ஆரம்பமானது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் வாசிக்கப்படுகின்றது.