Share with Friends

Live Feed

Last update 0.25mins ago

நாடாளுமன்றம் நாளை காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து முடித்துவிட்டார்.

இந்த வரவுசெலவுத்திட்டம் மீதான விவாதத்தின் போதும் வாக்கெடுப்பின் போதும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி என அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

2018 ஏப்ரல் மாதம் முதல் வங்கியூடான கொடுக்கல் வாங்கல்களின் போது 1000 ரூபாவிற்கு 20 சதம் விசேட வரி அறவிட நடவடிக்கை

கடந்த அரசாங்கம் விட்டுச்சென்ற கடனில் 1.9 ட்ரில்லியன் ரூபா இந்த வருடத்தில் மட்டும் மீள செலுத்தப்பட்டுள்ளது.

தம்புள்ளை மற்றும் கொழும்புடன் இணைக்கப்பட்ட நவீன​ பொருளதார மையமொன்று, யாழ்ப்பாணத்தில் நிறுவப்படவுள்ளது.

அரச பணியாளர்களுக்கு வழங்கப்படும் வாகன சலுகையை தொடர்ந்தம் அமுல்படுத்த நடவடிக்கை

இந்த நாட்டை நாம் பாரம் எடுக்கும் போது கடனில் முழ்கியிருந்தது. இந்த கடனை 2 வருடங்களுக்குள் கட்டி முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

காணாமல் போனோருக்கான அலுவலகத்திற்காக 1.4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

நெத்திலி, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு இன்று நள்ளிரவிலிருந்து வரி குறைக்கப்படுகின்றது.

எனினும் வியாபாரிகள் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்யவில்லை என்றால் தண்டனை வழங்கப்படும்.

2016 இற்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு “அக்ரஹார காப்புறுதித் திட்டம்” வழங்குவதற்கான நடவடிக்கை

வடக்கில் சிஞ கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு 1 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான தேசத்தை கட்டியெழுப்பும் வரியை ஒரு வருடத்திற்கு நீக்க யோசனை

வடக்கு மற்றும் கிழக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படும்.

முன்னேஸ்வரம், அநுராதபுரம் உள்ளிட்ட மத வழிபாட்டு இடங்களில் யாத்திரிகர்களுக்கான ஓய்வறைகள் அமைக்கப்படவுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் புனரமைக்கப்படும். மயிலிட்டி துறைமுகம் மற்றும் உட்பட அனைத்து துறைமுகங்களும் 2 வருடங்களுக்குள் புனரமைக்கப்படும்.

கலைஞர்களுக்கான மருத்துவ மற்றும் அவசர காப்புறுதி திட்டம் முன்னெடுக்கப்படும்.

இரத்தினபுரி மற்றும் வெலிமடை நீதிமன்றங்களை வேறு,இடத்தில் அமைக்க நடவடிக்கை

வேலைக்கு செல்லும் தாய்மார்கள், அவர்களது குழந்தைகளை பராமரிப்பதற்கு 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலங்களில் இளவயது குற்றவாளிகள் மற்றும் பிரதிவாதிகள் நீதிமன்றுக்கு வேறாக அழைத்துச் செல்லப்படுவர்

பஸ் பயணத்திற்காக ஒருங்கிணைந்த நேர அட்டவணையை அமுல் படுத்த நடவடிக்கை

சைபர் கிரைம் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்படும்

இலங்கை வங்கியில் மக்களுக்கு வழங்கப்படும் கடனை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

புதிய நூலகம் ஒன்றை அமைப்பதற்கு 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புரான வணக்கஸ்தலங்களை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, நவீன பதிவு செய்யக்கூடிய வகையிலான இயந்திரங்களுடன் கூடிய வசதிகளுக்கு 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

அமைச்சரை உரையாற்ற விடாமல் கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் கூச்சல்.

அமைச்சரை உரையாற்ற விடுமாறு சபாநாயகர் அறிவித்தல்

பொலிஸ் மற்றும் குற்றப் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு நிதியொதுக்கீடு

எமது நாட்டுக்கு பெறுமையை தேடி தந்த இராணுவ வீரர்களுக்காக அவர்களது வேலைத்திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2020 ஆம் ஆண்டில் 20,000 வீடுகள் வழங்கப்படும்.

இந்த வீடுகளுக்கு மாதம் 17,500 ரூபா வீதம் கட்ட வேண்டும்.

25,000 வீடுகளை நிர்மாணிக்க 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 2 இலட்சம் ரூபா நிதி உதவி

எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் ​நோய் அறிகுறிகளை, ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடிப்பதற்கு, 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடு,

வடக்கில் இடம்பெயர்தோருக்காக ஆரம்பிக்கபட்டுள்ள வீடமைப்புத்திட்டத்துக்கு, 3000 மில்லியன் ஒதுக்கீடு

உடல் பருமன் மற்றும் நீரிழிவு தூண்டக்கூடிய மென்மையான பானங்களுக்கு 50 வீதம் செண்ட்ஸ் வரி செலுத்தப்பட வேண்டும்.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் மதுபானங்களுக்கு NBT வரி விதிக்க தீர்மானின்னக்கடுகின்றது.

அனைத்து மக்களுக்கும் வீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. 17 1/2 மில்லியன் ரூபா நிதி இதற்காக ணதுக்கப்படுகின்றது.

கிராமப்புறத்திலிருந்து வரும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக விளையாட்டுக் காலணிகளுக்கு இன்றிரவு முதல் வரி அகற்றப்படும்.

மாத்தளை ஹொக்கி விளையாட்டரங்கை மேம்படுத்த 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

சூகததாச ஸ்டேடியம் மீண்டும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், இதற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளது.

மஹாபொல புலமைப்பரிசிலுக்கு, வருடாந்தம் ஒதுக்கப்பட்ட 300,000 ரூபாய் 500,000ரூபாயாக அதிகரிக்கப்படுகின்றது.

கிராமிய மட்டத்தில் 100 விளையாட்டு மைதானங்களை அபிவித்தி செய்ய 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காப்புறுதியைப் போன்று பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

கணிதம் போன்ற பாடங்களுடன் அழகியல் பாடங்களை கற்க உயர் தர மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்

ஆசிரியர் கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை 3500 ரூபாவிலிருந்து 5000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

நாட்டிலுள்ள தேசிய வைத்தியசாலைகளை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசேடதேவையுடைய நபர்களால் முன்னெடுக்கப்படும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வரி நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

வயம்ப, சபரகமு மற்றும் மொரட்டுவ ஆகிய இடங்களில் மருத்துவப் பணிகளை நிறுவுவதற்கு 1,250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் வைத்திய கல்வியை மேம்படுத்த 1250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

மஹரகம ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் ஆங்கில மொழி ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக ஒரு மையம் அமைக்கப்படவுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வலாகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் புதிய பீடங்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொறியியல், மருத்து துறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக 3,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதிகளை சுற்றுலாப் பயண வழிகாட்டியாக்கும் இலவச பயிற்சி மற்றும் சுற்றுலா சபையின் அனுமதியுடன் “Tuk Tuk” என ஸ்டிக்கர் ஒன்றினை காட்சிப்படுத்தி சுற்றுலா துறையில் இணைத்து கொள்ள நடவடிக்கை

நாட்டின் ஐந்து இடங்களில் ஐந்து தொழில்நுட்ப கல்லூரிகள் நிறுவப்படும். இதன்மூலம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்கள் பயனடைய முடியும்.

நாட்டின் இளைஞர் யுவதிகளுக்காகவும், அவர்களின் கல்வி மற்றும் தொழிலை முன்னெடுத்து செல்வதற்கும், 325 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

13 வயதில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களுக்கு உள்நாட்டு காணிகளை வாங்குவதற்கு வரையறை அறிமுகப்படுத்தப்படும்

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் கட்டாயமாக்கப்படுகின்றது.

வணிக பதிவுகளுக்காக One stop shop ஒன்று நிறுவப்படவுள்ளது.

13 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றால் அவர்கள் விரும்பும் பாடசாலையிலும், சிறந்த கல்விகளை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 2500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுகின்றது.

கோட்டை, நானுஓயா மற்றும் எல்ல ஆகிய புகையிரத நிலையங்கள், தொல்பொருள் இடங்களாக பிரகடனப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறைக்கு தேவையான சில குறிப்பிட்ட உணவுகள் மற்றும் பானங்கள் மீது சுமத்தப்படும் கட்டணத் தீர்வுகள் அகற்றப்படும்

போக்குவரத்து அமைச்சின் கீழ் முச்சக்கரவண்டிகளுக்கு ஒழுங்குமுறை ஆணையகம் ஒன்று நிறுவப்படவுள்ளது.

2025ஆம் ஆண்டளவில், சுற்றுலாத்துறையின் வளர்ச்சி 3 மடங்குகளால் அதிகரிக்கும்.

அனைத்து சுற்றுலாத்துறை சேவை வழங்குநர்களையும் இலங்கை சுற்றுலாத்துறை சபையின் கீழ் பதிவு செய்யுமாறு வலியுறுத்தல் விடுக்கப்படுகின்றது.

அன்னாசி, வாழைப்பழத்தின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக, கன்றுகளை உற்பத்தி செய்வதற்கு, விசேட ஆராய்ச்சி நிலையம்.

2018 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதியிலிருந்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களிடம் வரி பெறும் திட்டம் செயல்படுத்தப்படும்.

மசாலா பொருட்களின் தர நிலைகளை உறுதிப்படுத்துவதற்கும், கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மாணிக்கக்கல் தொழில்துறையை மேம்படுத்துவதற்கு வரி விலகல்

தேங்காய் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு உதவித் திட்டம் வழங்கவுள்ளதுடன், வரி விலக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்திலான பொதியிடலுக்கும் உதவி இறப்பர் செய்கைகளின் ஊடாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொருள் உற்பத்திக்கு உதவி வழங்கப்படவுள்ளது.

கருவா செய்கையை மேம்படுத்துவதற்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தேயிலை செய்கையை மேம்படுத்தவும் உதவி திட்டம். அதற்காக சிறு தேயிலை உரிமையாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

அவ்வாறான புதிய கண்டுபிடிப்புக்களில் ஈடுபடுவோருக்கு உதவித் திட்டமாக 350 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

ஏற்றுமதி சந்தை அணுகல் திட்டத்துக்கு, 800 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்புக்களில் ஈடுபடுவோருக்கும் உதவித் திட்டம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கப்பல்துறை மற்றும் துறைமுகத்திட்டங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்திலான ஆய்வு நிறுவனங்களை மேம்படுத்த நடவடிக்கை. இலத்திரனியல் நிதி கொடுக்கல் வாங்கல்களை அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்த நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டைக் குறைக்க 75 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் சட்டங்களை பாதுகாத்து, தனியார் துறைகளை மேம்படுத்தத் தீர்மானம்

நெல் உட்பட 6 தானிய பயிர்ச் செய்கைகளுக்கு 40,000 ரூபா வரை காப்புறுதி வழங்க தீர்மானம்.

வெளிநாட்டு நிறுவனங்களை நாட்டிற்குள் கொண்டு வரத்தீர்மானம்.

பல்கலைக்கழகங்களின் ஊடாக புதிய தொழில் நுட்பத்தை கல்வி கற்பதற்கு உதவி வழங்கத்தீர்மானம்.

தொழில்நுட்ப நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கும் உதவிகளை வழங்க திட்டம். அதற்காக எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேண்டியதொரு தொழிலில் ஈடுபடுவதின் ஊடாக பெண்களின் முன்னேற்றத்திற்காக கடனுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசேட தேவையுடையோர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாயின், அவர்களுக்கு 15வீத குறைந்த வட்டியில் கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிலாபம், மிரிஸ்ஸ, காரைநகர் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதேச மட்டத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க 2200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

என்டபிரைஸ் ஸ்ரீலங்கா கடனுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சுய தொழிலில் ஈடுபடுவோருக்கு கடனுதவிகளை பெற்றுக் கொள்வதற்கு பிணை வைக்கும் நடவடிக்கையை ரத்து செய்ய தீர்மானம்.

சுய தொழிலில் ஈடுபடுவோருக்கு நீண்ட கால கடனுதவியை வழங்கும் வகையில் புதிய வங்கியொன்றை ஆரம்பிக்க 10 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுய தொழிலில் ஈடுபடுவோருக்கும் விசேட திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம். புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னோக்கி செல்ல உதவி.

பொருளாதாரத்தை மேம்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடல் அட்டைகளை பிடித்தல், வளர்த்தலின் ஊடாக அவற்றை விற்பனை செய்வதற்கு கிளிநொச்சி பூநகர் பகுதியில் திட்டமொன்று ஆரம்பிக்க தீர்மானம்.

ஆழ்கடல் மீன்பிடியை வலுப்படுத்தவும் அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடித்துறைமுகங்களை நிர்மாணிக்கவும், மேம்படுத்தவும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர குளங்களை புனரமைப்பதற்கு, 1000 மில்லியன் ரூபாய்.

வளிமண்டலவியல் திணைக்களத்தை மேம்படுத்த நடவடிக்கை

ஆறு விளைச்சல்களுக்கு காப்புறுதி திட்டமொன்றை அறிமுகப்படுத்த தீர்மானம். இதற்காக 3000மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இது விவசாயிகளுக்கு முக்கியமான திட்டமாகும்.

மழை நீர் சேமிப்புத் திட்டமொன்றை ஆரம்பிக்க 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

கிளிநொச்சி, இரத்தினபுரி, பொலன்னறுவை பகுதிகளில் நிர்மாணிக்கப்படுகின்ற களஞ்சியசாலைகளின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை.

மீனவர் மற்றும் விவசாயிகளை வலுப்படுத்துவதற்கு தீர்மானம். அதனூடாக புதிய ஏற்றுமதி திட்டங்கள் அறிமுக்கப்படுத்தப்படவுள்ளன.

இலங்கையின் ஒவ்வொரு நிர்வாகப் பகுதிகளிலும், பசுமை இலங்கை திட்டத்துக்குக் கீழ், ஓடு பாதைகள், நூலகம், தியான மையங்கள் போன்றவை அமைக்கப்படும்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட 10 களப்புக்களை பாதுகாப்பதற்காக நிதி ஒதுக்கீடு. இந்தப் பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் நடவடிக்கை.

கரையோரப் பகுதிகளை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் மீனவத்துறைகளை வலுப்படுத்த 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

அழிவடைந்து வரும் மிருகங்களை பாதுகாப்பதற்காக 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

50ஆயிரம் கையடக்கத் தொலைத்தொடர்பு கோபுரங்கள் காணப்படுகின்றது. அவற்றை குறைப்பதற்கு தீர்மானம்.

ஒவ்வொரு தொலைபேசி அழைப்புக்காகவும் தொலைத் தொடர்பு கோபுரத்திற்கு வரியொன்றை அறவிடத் தீர்மானம்

யானைகள் மற்றும் ஏனைய மிருகங்கள் கூடுகளில் இல்லாது, திறந்த வெளியில் வளர்ப்பதற்கு அரசாங்கம் நிதியொதுக்கீடு செய்துள்ளது.

உடற்பயிற்சி செய்யக்கூடிய பூங்காக்களை உள்ளூராட்சி மன்றங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளது.

சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணமான பூங்கா உடற்பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

காற்றுப்பை (ஏயார் பேக்) இல்லாத வாகன இறக்குமதிக்கு தடை

நாகரீக ஆற்றுத் திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

களனி கங்கையின் வெள்ளப் பெருக்கைத் தடுப்பதற்கும் சுவர் எழுப்பப்படவுள்ளது.

பிளாஸ்டிக் உற்பத்திக்கான வரி அதிகரிக்கப்படுகின்றது. அழிவடையும் பொருட்களை உருவாக்குவதற்கும் தீர்மானம்.

குப்பை கொட்டுவதற்கும் மற்றும் முகாமைத்துவம் படுத்துவதற்கும் 3 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் சைக்கிளில், கார், பஸ் ஆகியவற்றிற்கு வாகனங்களுக்கு காபன்வரியொன்றை அறவிடவும் தீர்மானம்.

சூழலை பாதுகாப்பதற்காக காபன் வரி அறவிடப்படுகின்றது.

பாதுகாப்பற்ற வாகனங்களை கொள்வனவு செய்வது தடை செய்யப்படவுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் பஸ்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

காபன் வரியொன்றை அறிமுகப்படுத்த தீர்மானம்.

பழைய முச்சக்கரவண்டிகளை பங்களாதேஷிற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன

2500 சீசீக்கு குறைவான அதிசொகுசு வாகனங்களுக்கு அதிசொகுசு வாகன வரி அறவிடப்படவுள்ளது. டீசலினால் இயங்கும் முச்சக்கரவண்டிக்கான வரி 50 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றது.

புதிய இலத்திரனியல் முச்சக்கரவண்டியொன்றை கொள்வனவு செய்வோர் 10 வீதத்தை செலுத்தும் போது, அரசாங்கம் 90 வீதத்தை முதலீடு செய்யவுள்ளது.

மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கான வரி 10 இலட்சத்தினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதிசொகுசு வாகனங்களுக்கான வரி 25 இலட்சம் வரை அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த நோக்கத்தை சென்றடைவதற்கு 2035ஆம் ஆண்டாகும். அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் இலத்திரனியலில் இயங்கும் வாகனங்களாக பயன்படுத்தப்படவுள்ளன.

வாகன கொள்ளை ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இல்லை. 2040ஆம் ஆண்டாகும் போது எரிபொருளில் இயங்காத வாகனங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டு எதிர்க்கட்சியினர் சைக்கிளில் நாடாளுமன்றுக்கு வருகைத்தந்ததை இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டு இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட சேதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாகும்.

இலங்கையிலுள்ள சட்டங்கள் மிகவும் பழைமை வாய்ந்தது...

சுங்க சட்டம், கல்விச்சட்டம், விவசாய சட்டம் உள்ளிட்டவை அமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டது. அவைதிருத்தி அமைக்கப்பட வேண்டும்.

வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையானது 2020ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் குறைவடையும் என எதிர்பார்க்கின்றோம்.

என்டர்பிரைஸ் சிறீலங்கா என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை வரவு செலவுத்திட்டம் அமைகின்றது.

2020ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இலங்கைக்குள் சர்வதேச வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தக்கூடியவாறு சீர்த்திருத்தப்பட வேண்டும்.

நாட்டில் காணப்படுகின்ற காணிப் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு விசாரணை அவசியமாகின்றது.

அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

2020ஆம் ஆண்டாகும் போது தலா தேசிய வருமானத்தின் ஊடாக வரவு செலவுத்திட்டம் துண்டு விழும் தொகை 3.5 வீதமாக கொண்டு வர நடவடிக்கை

நாடாளுமன்றுக்கு தந்தையுடன் சைக்கிளில் வருகைத்தந்ததை டுவிட்டரில் பதிவிட்ட நாமல்

நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத்திட்டம் மற்றும் தனதுமுதலாவது வரவு செலவுத்திட்டம் இதுவென அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிப்பு.

வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதில் பெருமையடைகின்றேன்.

ஆளும் தரப்பினர் மேசைகளில் தட்டி நிதியமைச்சரவை வரவேற்றனர்.

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்மங்கள சமரவீரவினால் வாசிக்கப்படுவதற்கான அறிவிப்பு சபாநாயகரினால் சற்றுமுன்னர் விடுக்கப்பட்டது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றுக்கு வருகைத்தந்துள்ளார்.

வரவு - செலவுத்திட்ட சமர்ப்பிப்பில் பங்குகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட கூட்டு எதிரணியினர் சைக்கிளில் நாடாளுமன்றிற்கு வருகை

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.