இன்றைய தினம் காலை கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
பௌத்தர்களின் மிக முக்கியமான வழிபாட்டுத் தளங்களில் ஒன்றான கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் இடம்பெற்ற மூன்று வெடிப்பு சம்பவங்களையடுத்து அதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாட்டில் பயங்கரவாத குழுக்களின் செயல்பாட்டை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ருவண் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
I am shocked and saddened by these despicable acts of barbarism.
— Kumar Sangakkara (@KumarSanga2) April 21, 2019
My heart breaks for the victims and all of you are in my thoughts and prayers. I would like to extend my love and… https://t.co/BkZWiXDz2e
இலங்கையில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பில் பிரபல சமையல் வல்லுனர் குடும்பத்துடன் பலியான சோகம்.. மேலதிக தகவல்களுக்கு
Strongly condemn the horrific terrorist attack in Sri Lanka on Easter Sunday resulting in precious lives lost & hundreds injured. My profound condolences go to our Sri Lankan brethren. Pakistan stands in complete solidarity with Sri Lanka in their hour of grief.
— Imran Khan (@ImranKhanPTI) April 21, 2019
இலங்கையில் மத ஸ்தலங்களை இலக்கு வைத்து தொடர் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில், யாழ்.மரியன்னை தேவாயலம் ஆகிய பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்புவின் தெமடகொட பகுதியில் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெகிவலையில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடம் ஒன்றில் இந்த குண்டு வெடித்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரியல் பூங்கா மூடப்பட்டது.
இலங்கையில் போலீஸ் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று மாலை ஆறு மணி முதல், நாளை காலை ஆறு மணி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.
குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் தேவை என்று கோரியதை அடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் ரத்தம் கொடுக்க மருத்துவமனையில் திரண்டுள்ளனர்.
PM @RW_UNP met w ministers n senior military personnel; all measures taken to maintain peace. Security tightened. Please stay calm. Please act responsibly. Please NO politics. We must all act together as #SriLanka citizens. My condolences to all families who lost loved ones. pic.twitter.com/j6e3qEPgNt
— Harsha de Silva (@HarshadeSilvaMP) April 21, 2019
தேவாலயங்களில் தாக்குதல் நடந்துள்ளதை தொடர்ந்து மாலை நடைபெறவிருந்த பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு பாதிரியார் அறிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் 45 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதில் ஒன்பது பேர் வெளிநாட்டவர்கள்.
இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீர, இது நாட்டில் குழப்பத்தை உண்டாக்க எடுக்கப்பட்ட முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இது போன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும்.
Easter Sunday bomb blasts in churches & hotels, killing many innocent people seems to be a well coordinated attempt to create murder,mayhem & anarchy.All those who cherish democracy,freedom & economic prosperity must unite now with nerves of steel to defeat this heinous attempt.
— Mangala Samaraweera (@MangalaLK) April 21, 2019
காயமடைந்துள்ள பலரும் சிகிச்சைக்காக கொழும்பு மருத்துவமனை, மட்டக்களப்பு போதனா மருத்துவமனை, நீர்கொழும்பு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கையின் போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்பு தொடர்பாக பகிரப்படும் போலிச் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்- பிரதமர் ரணில் விக்ரமசிங்க
கொழும்பு நட்சத்திர விடுதிகளில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவார்கள்.
இலங்கையில் கொழும்பு, நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய ஊர்களில் ஆறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 105 பேர் உயிரிழந்துள்ளது தற்போது வரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.