Share with Friends

Live Feed

Last update 0.25mins ago

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது குறித்த வாக்கெடுப்பின்போது, ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது 500,000 வேலை வாய்ப்பை இழப்பதற்கு நிகர் என ஜார்ஜ் ஒஸ்பார்ன் எச்சரித்திருந்தார். ஆனால் 2021 ஆம் ஆண்டில் 500,000 வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என இன்று கூறப்பட்டுள்ளது.

மிகப்பெரிய நாடு, தெளிவான பார்வை, நம்முடைய பலம் தான் நமக்கு நம்பிக்கை மற்றும் நமக்கான இலட்சியத்தை நிர்மாணித்து அதன் வழியில் பயணிப்போம் என கூறி சான்சிலர் பிலிப் ஹெம்மன்ட் தனது அறிக்கையை முடித்துள்ளார்.

வாழ்வூதியம் (Living Wages) வருகிற 2017 ஆம் ஆண்டில் ஒரு மணி நேரத்திற்கு £7.20 முதல் £7.50 ஆக அதிகரிக்கும்.

வருமான வரி தனிப்பட்ட கொடுப்பனவு ஏப்ரல் 2017 இல் £ 11,000 இருந்து £ 11,500 ஆக அதிகரிக்கும்.

உள்நாட்டு உற்பத்தி மற்றும் வெளிநாடு தொடர்பான உதவிகளுக்கு 0.7 சதவிகிதம் செலவிட முடியும் என்று உறுதியளித்துள்ளார்.

ஆனால், இந்த முடிவு குறித்த அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி வரி 17% குறையும்.

காப்பீட்டு வரி 10 சதவீதத்திலிருந்து 12% சதவீதமாக உயரும்.

பிலிப் ஹெம்மன்ட் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகியதன் விளைவை எடுத்து கூறியுள்ளார்.

தற்போதைய மோசமான நிலையிலிருந்து பிரித்தானியாவை போராடி மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும்.

ஆனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகுவதாக முடிவெடுத்ததால் அதன் வரலாற்று போக்கே மாறியுள்ளது.

எரிபொருள் மற்றும் வீட்டு வாடகை போன்றவை குறைந்திருக்கிறது. ஆனால் பொதுவாக பார்த்தால் இந்த நிதியறிக்கை மோசமானதாகவே உள்ளது.

2011 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது, அதிகரிக்கப்பட்ட எரிபொருளுக்கான வரி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை எரிபொருள் லிற்றர் ஒன்றுக்கு 57.95 காசுகள்(Penny) வரி செலுத்தப்பட்டது. தற்போது இந்த வரி ரத்து செய்யப்பட்டுள்ளது

உள்நாட்டு போக்குவரத்துச் சேவையில் 1.1 பில்லியன் பவுண்ட்களை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு 20 சதவீத வரி வசூலிக்கப்படும்.

பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்னர் அதிக கடன் மற்றும் மெதுவான வளர்ச்சி குறித்து பிரித்தானிய சான்சிலர் பிலிப் ஹெம்மன்ட், நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகையாக இந்த வருடம் 68.2 பில்லியன் பவுண்ட்களும் அடுத்த வருடம் 59 பில்லியன் பவுண்ட்களும் இருக்கும்.

2017 ஆம் ஆண்டு எப்ரலில் இருந்து தேசிய வாழ்வாதார சம்பளம் மணிக்கு 7.50 பவுண்ட்களாக அதிகரிக்கப்படும்.

1.4 பில்லியன் பவுண்ட் செலவில் இங்கிலாந்தில் 40 ஆயிரம் புதிய வீடுகள் கட்டப்படும்.

தனிப்பட்ட கொடுப்பனவுகள் 12 ஆயிரத்து 500 பவுண்ட்களாக அதிகரிக்கப்படும்.

வரி ரசீதுகள் இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளது.

கடந்த 5 வருடங்களில், புதிய தேசிய உற்பத்தித்திறனுக்காக மட்டும் £23bn முதலீடு செய்யப்போவதாகவும். எதிர்கால பொருளாதாரம் கருதி, அதாவது நாட்டில் 2021 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் மற்றும் இதர மேம்படுத்துதல் திட்டங்களுக்கு £2bn முதலீடு செய்யவிருப்பதாக பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சியின் சான்சிலர் பிலிப் ஹென்மன்ட்

கடந்த ஆறு ஆண்டுகள் வீணாகி போன தோல்வியான ஆண்டுகள் எனவும் எதிர்காலம் குறித்த எந்த எதிர்பார்ப்பும் இல்லை என பிரித்தானிய தொழிற்கட்சியின் நிழல் அமைச்சரான ஜோன் மெக்டோனேல் தெரிவித்துள்ளார்.

புள்ளிவிபரங்கள் நாட்டில் வளர்ச்சி குறைந்துள்ளதை காட்டுகின்றன. ஊதிய உயர்வுகள் குறைந்துள்ளன. வர்த்தக முதலீகள் குறைந்துள்ளதை காட்டுகின்றன.

அரசாங்கத்தின் இலக்கு தோல்வியடைந்துள்ளது. கடன் இலக்கு தோல்வியடைந்துள்ளது. நலன்புரி உதவிகளுக்கான இடைவெளியும் தோல்வியை தழுவியுள்ளது.

முடிவுகள் தெளிவாக இல்லை. அரசாங்கத்தின் நீண்டகால பொருளாதார திட்டம் தோல்வியடைந்துள்ளது என ஜோன் மெக்டோனேல் குறிப்பிட்டுள்ளார்.

Liberal Democrats கட்சியின் தலைவர் Tim Farron கூறியதாவது, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானிய விலகிய பின்னர், நாட்டின் பொருளாதார நிலையை சமாளிக்க மட்டும் நம்மால் முடியும்.

பிரித்தானியாவின் பொருளாதார பாதிப்பை தடுக்கவேண்டுமெனில், புதிதாக பிரதமராக பதவியேற்றுள்ள தெரசா மே, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானிய விலகுவதை நிறுத்த வேண்டும்.

ஏனெனில், மக்களுக்கு என்ன தேவை என்பதை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார் என கூறியுள்ளார்.

பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சியின் சான்சிலர் பிலிப் ஹென்மன்ட்

பிரித்தானியாவின் உட்பட்டமைப்பு வசதிகளில் பாரிய முதலீடுகள், மில்லியன் கணக்கான வறிய குடும்பங்கள், ஏழை தொழிலாளுக்கான வீட்டுச் செலவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஊழியர்களுக்கான சம்பள உயர்வுகள் என்பனவும் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றில் இருந்து இருந்து பிரிந்த பின்னர், முதல் முறையாக சமர்பிக்கப்படும் இந்த வரவு செலவு அறிக்கையில், குடும்ப முகாமைத்துவம் தொடர்பாக உதவுதல் போன்ற விடயங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

வரவிருக்கும் சவாலானது நீண்டகால பொருளாதார பிரச்சினை மற்றும் கைத்தொழில் துறைகளில் குறைந்தளவான பலன்களையே கொடுக்கும் எனவும் ஹென்மன்ட் கூறியுள்ளார்.

லண்டன் நிறுவனத்தின் தலைவர் Stephen Ludlow கூறியதாவது, நிறுவனங்கள், சந்தைப்படுத்தல், பயிற்சி மற்றும் தர கட்டுப்பாடு போன்றவற்றின் முதலீட்டிற்கு ஆபத்து உள்ளது.

வாடகைகளை அதிகரிப்பதன் மூலம் பங்குசந்தைகளின் இழப்பீட்டை குறைக்க முடியும்.

வரவு செலவு திட்டத்திற்காக அறிக்கையைதாக்கல் செய்வதற்கு முன்னர், கொன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்பி PhilipHammond, தனது டுவிட்டர் பக்கத்தில், எங்கள்நாட்டின் வரலாற்றில் புதிய அத்தியாயம் என பதிவிட்டபின்னர்பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.