Share with Friends

Live Feed

Last update 0.25mins ago

அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பிற்கு ரஷ்யா ஜனாதிபதி புதின் வாழ்த்து. சர்வதேச பிரச்சனைகளை தீர்க்க ஒன்றாக செயல்படுவோம் என கருத்து தெரிவித்துள்ளார்

அமெரிக்காவின் ஜனாதிபதியானார் டொனால்ட் டிரம்ப் - மேலதிக தகவல்களுக்கு

288 இடங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

276 இடங்களில் வெற்றி - விஸ்கோன்சின் மாகாணத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளார்

டொனால்ட் டிரம்பின் வெற்றி வாய்ப்பு அமெரிக்க பங்குச்சந்தையை மட்டுமின்றி சர்வதேச முதலீட்டாளர்களையும் பெரிதும் பாதித்துள்ளது.

முழுமையான தகவல்களுக்கு

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் Paul Ryan டுவிட்டரில் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

பிரான்ஸ் வலது சாரி கட்சியின் தலைவரான Marine Le Pen, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்ட் டிரம்புக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Utah-வில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். Utah மாகாணத்தில் அதிர்ச்சி தரும் விடயமாக ஹிலாரி கிளிண்டன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கான பிரான்ஸ் தூதர் Gerard Araud, நம் கண்களுக்கு முன்பே உலகம் நொறுங்கி கொண்டிருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளார்.

Mark Cuban என்ற பிரபல தொழிலதிபரின் டுவிட்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் செய்தியை தொடர்ந்து கனடாவில் உள்ள அரசு குடியமர்வு இணையத்தளம் செயலிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தகவல்களுக்கு

நவடாவில் 49 சதவிகித வாக்குகளுடன் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார். டொனால்ட் டிரம்ப் 45 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளார்

கண்ணீருடன் கிளிண்டன் ஆதரவாளர்கள்

REUTERS

ஹிலாரி கிளிண்டன் வாஷிங்டனிலும், டொனால்ட் டிரம்ப் ஜார்ஜியாவிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதனை குறிக்கும் வகையில் Empire State Building டொனால்ட் டிரம்ப் புகைப்படத்துடன் ஒளிர்ந்தது.

டொனால்ட் டிரம்புக்கு இன்னும் 38 இடங்களே தேவையுள்ள நிலையில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதை அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி டொனால்ட் டிரம்ப் 216 இடங்களையும், ஹிலாரி கிளிண்டன் 209 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

நாடு முழுவதுமே ஹிலாரி கிளிண்டன் ஆதரவாளர்கள் சோகத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புளோரிடாவின் வாக்கு எண்ணிக்கையே வெற்றியை தீர்மானிக்கும் என கருதப்படுகிறது.

கலிபோர்னியா மற்றும் மஸச்சூசெட்ஸ் ஆகியவை உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் மரிவானா போதைப்பொருளை பொழுது போக்கு ரீதியாக பயன்படுத்த ஒப்புதல் தீர்மானம் வழங்குவதா என்பது குறித்து மக்கள் வாக்களித்துள்ளனர்

தேர்தல் முடிவுகளை ஆர்வமுடன் பார்த்து கொண்டிருக்கும் ஹிலாரி கிளிண்டன் ஆதரவாளர்கள்

Getty Images

ஹிலாரி கிளிண்டன் 190 இடங்களையும், டொனால்ட் டிரம்ப் 187 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

தற்போதைய நிலவரம்

டொனால்ட் டிரம்ப்

Idaho (4 தேர்வாளர் குழு வாக்குகள்)

ஹிலாரி கிளிண்டன்

California (55 தேர்வாளர் குழு வாக்குகள்)

Hawaii (4 தேர்வாளர் குழு வாக்குகள்)

தற்போதைய நிலவரப்படி டொனால்ட் டிரம்ப் 168 இடங்களையும்(49.1 சதவிகிதம்), ஹிலாரி கிளிண்டன் 122 இடங்களையும்(46.7 சதவிகிதம்) கைப்பற்றியுள்ளனர்.

டொனால்ட் டிரம்ப் Missouri மாகாணத்திலும், ஹிலாரி கிளிண்டன் New Mexico மாகாணத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்

தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் பங்குச்சந்தை 500 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும் போது டொனால்ட் டிரம்ப் தான் ஜனாதிபதி ஆவார் என பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனை டிரம்பின் ஆதரவாளர்கள் மிக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

2012ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமா 62, 156, 980 வாக்குகளை(50.6 சதவிகிதம்) பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுவரையிலும் ஹிலாரி கிளிண்டன் 46.2 சதவிகித வாக்குகளும், டொனால்ட் டிரம்ப் 49.9 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளனர்

ஹிலாரி கிளிண்டன் 104 மாகாணங்களிலும், டொனால்ட் டிரம்ப் 129 மாகாணங்களிலும் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் இதுவரை 5 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

Kansas (6 தேர்வாளர் குழு வாக்குகள்)

Colorado (9 தேர்வாளர் குழு வாக்குகள்)

Nebraska (5 தேர்வாளர் குழு வாக்குகள்)

Texas (38 தேர்வாளர் குழு வாக்குகள்)

Wyoming (3 தேர்வாளர் குழு வாக்குகள்)

North Dakota (3 தேர்வாளர் குழு வாக்குகள்)

South Dakota (3 தேர்வாளர் குழு வாக்குகள்)

ஹிலாரி கிளிண்டன் நியூயோர்க் மாகாணத்தில் வெற்றி பெற்றுள்ளார். (28 தேர்தல் வாக்குகள்)

மேலும்,

Arizona (11 தேர்வாளர் குழு வாக்குகள்)

Louisiana (8 தேர்வாளர் குழு வாக்குகள்)

Michigan (16 தேர்வாளர் குழு வாக்குகள்)

Minnesota (10 தேர்வாளர் குழு வாக்குகள்)

Wisconsin (10 தேர்வாளர் குழு வாக்குகள்) ஆகிய மாநிலங்களிலும் ஹிலாரி வெற்றி பெற்றுள்ளார்.


East Coast மாகாணத்தில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார், டொனால்ட் டிரம்ப் அலபாமா மற்றும் கரோலினா ஆகிய மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

புளோரிடா மாகாணத்தில் செனட்டர் மார்க்கோ ரூபியோ மீண்டும் தெரிவாகியுள்ளார். அவருக்கு பல்வெறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அடுத்த 15 நிமிடங்களில் அமெரிக்காவில் உள்ள 16 மாகாணங்களில் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை முடிவுக்கு வந்த மாகாணங்களில் இருந்து வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் துவங்கியுள்ளன.

அமெரிக்காவின் புறநகர் பகுதிகளில் டிரம்ப் அலை வீசுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரையான கருத்துக்கணிப்பில் டிரம்ப் 24 வாக்குகளும் ஹிலாரி 3 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்: மேற்கு வர்ஜீனியா மாகாணத்தில் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி வாய்ப்பு பிரகாசம்

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் துவங்கியுள்ளன. இண்டியானா மற்றும் கென்டக்கி மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெறுவார் எனவும், கிளின்டன் வெர்மான்ட் மாகாணத்தில் வெற்றி பெறுவார் எனவும் தெரிய வந்துள்ளது.

வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வௌயிட்ட டிரம்ப் மகன் எரிக் டிரம்ப்பிற்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டிரம்ப் டவரில் தேர்தல் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் வெற்றியை கொண்டாட அவரின் உருவத்தில் கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Vote Castr தகவல் படி முக்கிய மாநிலமான புளோரிடாவில் கினின்டன் நான்கு புள்ளி முன்னணியில் உள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்டுள்ளது. புளோரிடாவில் ஐனநாயகக் கட்சி வேட்பாளர் கிளின்டன் 48%, குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் 44% ஆதரவு பெற்றுள்ளனர். ஐனநாயகக் கட்சி புளோரிடாவை கைப்பற்றினால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வெற்றி கடினம் என கூறப்படுகிறது.

240 ஆண்டுகள் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெண் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க அமெரிக்கா மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

புளோரிடா, Pompano Beach வாக்குச் சாவடியில் இரண்டு வாக்குப்பதிவு கண்காணிப்பாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாக்களிக்கும் முறையில் குறுக்கீடு செய்ததால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

”தேர்தலின் முடிவை ஏற்றுக் கொள்வேன். எனக்கு எத்தகைய சூழ்நிலை அமையும் என்பதை எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன். அதிகாரம் தொடர்பான மாற்றங்கள் மிகவும் மென்மையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். வரலாற்றில் நான் இடம்பிடித்ததிற்கு மகிழ்ச்சியடைகிறேன்.” குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்.

டிரம்ப்பின் early-voting locations பிரச்சாரம் மீது நெவாடா மாநில நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கர்கள் மட்டுமின்றி மெக்ஸிக்கோ மற்றும் கனடா எல்லைகளில் உள்ள மக்களும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளின்படி ஒருவர் வாக்களிப்பதை இன்னொருவர் பார்வையிடுவது குற்றமாகும். ஆனால் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் தனது மனைவி வாக்களிப்பதை அருகே இருந்து பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி இதுகுறித்து தகவல் வெளியிட்ட எரிக் டிரம்ப் சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தனது டுவிட்டை அழித்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியான கொலராடோ பெண்மணி பெல்லா என்பவர் மருத்துவமனை செல்லும் வழியில் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்ய வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், தனது மனைவி மற்றும் மகளுடன் வந்து Manhattan வாக்குசாவடியில் வந்து வாக்கினை பதிவு செய்துள்ளார்

டொனால்ட் டிரம்புக்கு எதிராக மேலாடை இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவேளை நான் தோல்வி அடைந்தால், டிரம்ப் சொன்ன பதில் இதுதான், முழுமையாக படிக்க

ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவளிக்கும் விதமாக பெண்கள் பலரும் கோட்சூட் அணிந்து கொண்டு தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

பென்சில்வேனியாவில் டொனால்ட் டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் புகைப்படத்துடன்கூடிய குக்கீஸ்கள் விற்கப்படுகின்றன, இதில் டிரம்ப்பே முன்னிலை வகிக்கிறாராம்.

Getty Images

மிச்சிகன் நகரில் வாக்குகளை பதிவு செய்யும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் வாக்காளர்கள் தாமதமாக வாக்களித்து வருகின்றனர்

தேர்தல் முடிவுகள் குறித்து பொதுமக்கள் பலத்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் என்னால் இயன்ற வரை நன்மைகளை செய்வேன்.

ஜனாதிபதி பதவிக்கான பொறுப்பை நான் முழுமையாக உணர்கிறேன் என சற்று முன்னர் வாக்களித்த ஹிலாரி உறுதியளித்துள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள Chappaqua பகுதியில் ஹிலாரியும் அவரது கணவரான கிளிண்டனும் சற்று முன்னர் வாக்களித்தனர். வரிசையில் நின்ற வாக்காளர்களை கைகுலுக்கி வரவேற்றார்.

CNN

தனது தந்தைக்கு வாக்களித்தது அற்புதமான தருணம் என டொனால்ட் டிரம்ப்பின் மகன் டுவிட் செய்துள்ளார்.

பிரபல பாடகரான John Legend, டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தகுதியில்லாதவர் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் என சாணக்யா மீன் கணித்துள்ளது.

மேலும் விபரங்களுக்கு

அமெரிக்காவில் தற்போது 17 மாகாணங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

”எனக்கு நானே வாக்களிக்க போகிறேன்”....தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நகைச்சுவையாக பேசிய டொனால்ட் ட்ரம்ப், வாக்காளர்கள் தன்னை வெற்றி பெற செய்வார்கள் என நம்புவதாக டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் முதல் டுவிட்டர் பதிவு இதுதான்,

“நேரத்தை மிச்சப்படுத்துங்கள்- வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்” என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய போலியான அறிவிப்புகள் வைரலாக பரவி வருகிறது, இதை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம், வெறுமனே குறுஞ்செய்தி மூலம் வாக்களிக்க முடியாது என பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் வெளியாகும் அனைத்து ஊடக கருத்துக்கணிப்பில் ஹிலாரி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்

North Carolina, Ohio மற்றும் West Virginia ஆகிய 3 மாகாணங்களில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

அமெரிக்க மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் வசிக்கும் Manhattan நகரில் வாக்குபதிவு தொடங்கியுள்ளது.

தற்போது வெளியான கருத்துக்கணிப்பில் ஹிலாரிக்கு வெற்றி வாய்ப்பு 70.9 சதவிகிதமாகவும் டிரம்பிற்கு 29.1 சதவிதமாகவும் உள்ளதாக தெரியவந்துள்ளது

Florida, Delaware, Georgia, Massachusetts, Maryland, Michigan, new Hampshire, Pennsylvania, Rhode Island, South Carolina, Tennessee ஆகிய 11 மாகாணங்களில் காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்குகிறது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க ஆவலுடன் காத்திருப்பதாக பிரிட்டன் பிரதமர் தெரெசா மே தெரிவித்துள்ளார்.

வர்த்தகம் மட்டுமின்றி தீவிரவாதம், பாதுகாப்பு விடயங்களில் அமெரிக்கா- பிரிட்டன் இடையே நல்லுறவு நிலவ வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.

Getty Images

ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் Tim Kaine மற்றும் அவருடைய மனைவி Anne Holton வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்மோண்ட் நகரில் சற்று முன்னர் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.

North Carolina, Ohio மற்றும் West Virginia ஆகிய மாகாணங்களில் அமெரிக்க நேரப்படி காலை 6.30 மணிக்கு வாக்குபதிவு தொடங்குகிறது

அமெரிக்காவில் New York, Connecticut, Indiana, Kentucky, Maine, New Jersey மற்றும் Virginia ஆகிய 7 மாகாணங்களில் வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது

நியூ ஹாம்சயர் மாகாணத்தில் ஆர்வமுடன் வந்து வாக்களிக்கும் மக்கள்

Photograph: Xinhua / Barcroft Images

BBC

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐரோப்பாவின் பங்குகள் இன்றைய நாள் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Dixville Notch

ஹிலாரி கிளிண்டன்: 4 வாக்குகள்

டொனால்டு டிரம்ப்: 2 வாக்குகள்

கேரி ஜான்சன்: 1 வாக்கு

Millsfield

டொனால்டு டிரம்ப்: 16 வாக்குகள்

ஹிலாரி கிளிண்டன்: 4 வாக்குகள்

Hart’s Location

ஹிலாரி கிளிண்டன்: 17 வாக்குகள்

டொனால்டு டிரம்ப்: 14 வாக்குகள்

கேரி ஜான்சன்: 3 வாக்குகள்

வடக்கு கரோலினாவில் இறுதி கட்ட பிரசார ஊர்வலத்தை முடித்துக் கொண்டு நியூயார்க் திரும்பிய ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஷேன் கிம்ப்ரோ மற்றும் கேட் ருபின்ஸ் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர்

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தினத்தன்று அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என தகவல்கள் வெளியான நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக பெண் ஒருவரை ஜனாதிபதியாக வெள்ளை மாளிகைக்குள் அனுப்புங்கள் என பராக் ஒபாமா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை நியூ டிக்ஸ்வில்லி நாட்ச் என்ற கிராமம் நள்ளிரவில் தொடங்கி வைத்துள்ளது.

மேலும் விபரங்களுக்கு

இந்த ஆண்டில் தேர்தலுக்கு 3 நாள்களுக்கு முன்னதாகவே (நவம்பர் 4) 3.5 கோடி பேர் தங்கள் வாக்குகளை முன்னதாகவே செலுத்தி புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.

228 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அரசியல் சட்டப்படி மாகாண அளவிலான தேர்வாளர் குழு மூலமாகவே ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

"அமெரிக்காவை பார்த்து உலகமே சிரிக்கிறது. உலக மக்களின் பொழுது போக்கிற்கு அமெரிக்க தேர்தல் ஒன்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி இல்லை. ஆனால், டொனால்ட் டிரம்ப் இதை தான் செய்து வருகிறார்" - பிரபல மொடல் மடோன்னா அதிரடி பேச்சு

உலகப் பொருளாதாரமே டொலரை மையமாக வைத்து இயங்கி வரும் நிலையில், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன

ஹிலாரி அமெரிக்க ஜனாதிபதியானால் தற்போதைய பொருளாதார அரசியல் நடைமுறைகளில் பெரிதாக எந்த மாற்றத்தையும் கொண்டு வரமாட்டார் என்பதே பொருளாதார வல்லுநர்களின் கணிப்பாகும்.

மிக்சிகனில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது “தில்லு முல்லு” அமைப்புகளால் ஹிலாரி கிளிண்டன் பாதுகாக்கப்படுவதாக டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்.

தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார் என்ற கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும் விபரங்களுக்கு

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ளது, ஜனநாயக கட்சி சார்பாக ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.