Share with Friends

Live Feed

Last update 0.25mins ago

ஈரான் முழுவதும் கொரோனா பரவிவிட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கும், சாதாரண ஜலதோஷத்திற்கும் வித்தியாசம் கண்டறிவது எப்படி? மேலும் தெரிந்து கொள்ள

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாட்டின் அனைத்து மழலையர் பள்ளி, உயர்நிலை பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவதாக டென்மார்க் பிரதமர் அறிவித்துள்ளார்.

இத்தாலியின் Lombardy நகரில் முதன்முறையாக பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி கொரோனா நுழைந்தது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஜேர்மனி மூலமே தங்கள் நாட்டுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என குற்றம்சாட்டியுள்ளது.


இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் முடிவடையும் அல்லது கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்ப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையக் குழுவின் தலைவர் டாக்டர் ஜாங் நன்ஷான் கூறியுள்ளார்.

2003 ஆம் ஆண்டில் SARS வெடிப்பை எதிர்த்துப் போராடுவதில் உதவியதற்காக புகழ்பெற்ற 83 வயதான தொற்றுநோயியல் நிபுணர் ஜாங் நன்ஷான் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமான வேன் தீன்ஷிங் மற்றும் அவர் மனைவி மருத்துவமனை ஊழியர்களால் அனுப்பி வைக்கப்படும் காட்சிகள்

அமெரிக்கா மற்றும் கனடாவில் பரவும் கொரோனா வைரஸ்.. மேலதிக தகவல்களுக்கு

கொரோனா வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்த மருத்துவரான லி வென்லியாங் காலமானார்.

கொரோனா வைரஸ் குறித்து Dean Koontz என்பவர் 1981-ஆம் ஆண்டு எழுதிய நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்திற்கு The Eyes of Darkness என்று பெயர், அதில், சீனா இராணுவ ஆய்வகத்தில், போர்க்காலத்தில் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்படும் புதிய வைரஸ் ஒன்று உருவாக்குகிறது.

இந்த ஆய்வாக சீனாவில் வுஹானில் ஒரு முரண்பாடாக(தெரியாமல்) வைக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸிற்கு வுஹான் 400 என்று அழைக்கப்படுகிறது.

இது ஒரு சரியான ஆயுதம், ஏனெனில் இது மனிதர்களை மட்டுமே பாதிக்கும், இது மனித உடலுக்கு வெளியே ஒரு நிமிடத்திற்கும் மேலாக உயிர்வாழ முடியாது.

இது ஒவ்வொருவர் வழியாக பரவக் கூடியது என்று குறிப்பிட்டுள்ளது. இது ஒரு கற்பனையான நாவலை கொண்டு எழுதப்பட்டதாக கூறப்பட்டாலும், தற்போது இதில் குறிப்பிட்டது போன்றே நடப்பது ஆச்சரியமாக உள்ளது.

வேப்பிலை, துளசி, நிலவேம்பு, தூதுவளை, பப்பாளி இலை, சஞ்சீவி வேர் மற்றும் வெட்டிவேர் போன்ற 11 வகை மூலிகைகளை ஒருநாள் முழுக்க வெயிலில் காய வைத்து அதை மறுநாள், அதை நீரில் கொதிக்கவைத்து, இறக்கி வடிகட்டி சேகரித்தேன்.

கொரோனாவுக்கான மருந்து தயாரானது. இந்த மூலிகைச் சாற்றை சாப்பிட்டால், வெள்ளையணுக்கள் அதிகமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, நோய் பரவலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுத்தும் என தமிழக மாணவன் இசக்கிராஜ் பேட்டியளித்துள்ளார்.

உலக நாடுகளை நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸ் பாம்புகளிடமிருந்து வந்திருக்கலாம் என முதலில் கூறப்பட்ட நிலையில் புதிய திருப்பமாக வௌவாலிடமிருந்து தான் முதலில் பரவியிருக்கும் என சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு